நீங்க நினைச்சு கூட பார்க்காத அம்சங்களுடன் வரும் Vivo V25 Pro: அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!

|

விவோ நிறுவனம் புதிய விவோ வி25 ப்ரோ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

விவோ நிறுவனம்

விவோ நிறுவனம்

விவோ நிறுவனம் முன்பு போல் அதிகமான ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதில்லை. ஆனால் இந்நிறுவனம் தற்போதுஅறிமுகம் செய்யும் ஒரு சில போன்கள் தரமான அம்சங்களுடன் தான் வெளிவருகிறது.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

விவோ வி25 ப்ரோ

விவோ வி25 ப்ரோ

அந்தவகையில் விரைவில் வெளியாகும் விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் கூட தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றிசற்று விரிவாகப் பார்ப்போம்.

உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

அதாவது கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த சிப்செட் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இதில் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும் இந்த விவோ ஸ்மார்ட்போன்.

டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..

சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D curved AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ஒரு சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் என்றே கூறலாம்.

மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

12ஜிபி ரேம்

12ஜிபி ரேம்

விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனைபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..

அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 80 பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?பட்ஜெட் விலையில் 42 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டம் பற்றி தெரியுமா?

சூப்பரான அல்ட்ரா வைடு கேமரா

சூப்பரான அல்ட்ரா வைடு கேமரா

இந்த புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி portrait லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராஅமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த போனில் 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் இருப்பதால் அருமையாக புகைப்படங்களை எடுக்க முடியும்.

புதிய உத்தரவு-ரேசன் பொருள் வாங்குவதில் இருந்த சிக்கல் நீக்கம்:இனி கைரேகை இல்லாவிட்டாலும், இது இருந்தால் போதும்புதிய உத்தரவு-ரேசன் பொருள் வாங்குவதில் இருந்த சிக்கல் நீக்கம்:இனி கைரேகை இல்லாவிட்டாலும், இது இருந்தால் போதும்

தரமான அம்சங்கள்

தரமான அம்சங்கள்

குறிப்பாக சமீபத்தில் வெளியான நத்திங் போன் (1) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 2டி, கூகுள் பிக்சல் 6ஏ ஸ்மார்ட்போன்கனை விட தரமான அம்சங்களுடன் இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த புதிய விவோ போன் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?இறந்த நபரின் ஆதார், PAN, லைசன்ஸ் போன்ற ஆவணங்களை என்ன செய்வது? எப்படி இவற்றை சரியாக நிர்வகிப்பது?

 விவோ வி25 ப்ரோ விலை?

விவோ வி25 ப்ரோ விலை?

ஆன்லைனில் வெளிவந்த தகவலின்படி புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்புஇந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன்.

அதேபோல் இந்தியாவில் விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்பதால் விவோ நிறுவனமும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை மட்டும் தான் அதிகமாக அறிமுகம் செய்து வருகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V25 Pro smartphone to launch in India next month: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X