Vivo V25 Pro Vs Oneplus Nord 2T: மிட்-ரேன்ஜ் பிரிவில் போட்டி, கொடுக்குற காசுக்கு எது மதிப்பு?

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் பிரதானமாக Vivo மற்றும் OnePlus இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. Vivo நிறுவனம் பட்ஜெட், மிட்-ரேன்ஜ் மற்றும் ப்ரீமியம் விலைப் பிரிவுகளில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

ஆனால் Oneplus ப்ரீமியம் விலை ஸ்மார்ட்போன்களில் தான் கவனம் செலுத்தி வருகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அவ்வப்போது மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது.

Vivo V25 Pro 5G மற்றும் OnePlus Nord 2T 5G

Vivo V25 Pro 5G மற்றும் OnePlus Nord 2T 5G

அதன்படி, விவோ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்கள் ஒரே சமயத்தில் மிட்-ரேன்ஜ் விலைப் பிரிவு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அது Vivo V25 Pro 5G மற்றும் OnePlus Nord 2T 5G ஆகும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும் ஒப்பிட்டு எது சிறந்தது என்ற விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

Vivo V25 Pro 5G Vs OnePlus Nord 2T 5G: விலை

Vivo V25 Pro 5G Vs OnePlus Nord 2T 5G: விலை

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.35,999 எனவும் 12GB ரேம் + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.39,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல் OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.28,999 எனவும் 12GB ரேம் + 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.33,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

Vivo V25 Pro 5G Vs OnePlus Nord 2T 5G: சிறப்பம்சங்கள்

Vivo V25 Pro 5G Vs OnePlus Nord 2T 5G: சிறப்பம்சங்கள்

HDR10+ பேனல் உடன் கூடிய Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போனின் 6.56 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது.இந்த விவோ ஸ்மார்ட்போனானது ஃப்ளோரைட் AG கண்ணாடி வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட பயோனிக் கூலிங் சிஸ்டம் உள்ளது.

அதேபோல் OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனானது 90HZ ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 6.43 இன்ச் FHD+ ஃப்ளூயட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. பின்புற பேனலில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு எதுவும் இல்லை.

Vivo மற்றும் Oneplus ஸ்மார்ட்போனின் சிப்செட் செயல்திறன்

Vivo மற்றும் Oneplus ஸ்மார்ட்போனின் சிப்செட் செயல்திறன்

Vivo V25 Pro 5G மற்றும் OnePlus Nord 2T 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனும் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இரண்டு போன்களும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

பேட்டரி ஆதரவுகள் எப்படி?

பேட்டரி ஆதரவுகள் எப்படி?

Vivo V25 Pro 5G ஆனது 66W ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவுடன் 4,830 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

அதேபோல் OnePlus Nord 2T 5G ஆனது 80W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4,500 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் 30 நிமிடங்களுக்குள் 100% வரை ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியும்.

Vivo V25 Pro 5G, OnePlus Nord 2T 5G: கேமரா அம்சங்கள்

Vivo V25 Pro 5G, OnePlus Nord 2T 5G: கேமரா அம்சங்கள்

Vivo V25 Pro 5G, OnePlus Nord 2T 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் கேமரா அடிப்படையில் பல வேறுபாடிகளை கொண்டிருக்கிறது.

Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போனானது OIS உடனான 64MP பிரதான கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. 8MP அல்ட்ரா வைட் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 60fps வேகத்தில் 4K தர வீடியோவை பதிவு செய்ய முடியும்.

50MP Sony IMX766 முதன்மை கேமரா

50MP Sony IMX766 முதன்மை கேமரா

OnePlus Nord 2T ஸ்மார்ட்போனானது OIS உடனான 50MP Sony IMX766 முதன்மை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மற்றும் 2MP மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 32MP சோனி IMX615 லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Vivo V25 Pro 5G Vs OnePlus Nord 2T 5G: எது சிறந்தது?

Vivo V25 Pro 5G Vs OnePlus Nord 2T 5G: எது சிறந்தது?

Vivo V25 Pro 5G மற்றும் OnePlus Nord 2T 5G ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனும் மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் மற்றும் 12GB ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

இதன்மூலம் இரண்டு ஸ்மார்ட்போன்களின் செயல்திறனும் ஏரத்தாள ஒரே மாதிரியாகவே இருக்கிறது.

கேமராவைப் பொறுத்தவரை, Vivo V25 Pro 5G சிறப்பாக இருக்கிறது. ஆனால் விலை சற்று அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்?

எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்?

Vivo V25 Pro 5G ஸ்மார்ட்போனில் மேம்பட்ட கேமராக்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட காட்சி ஆதரவுகள் இருக்கிறது. OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போனை பொறுத்தவரை பேட்டரி பேக்கப் சிறப்பாக இருப்பதால் கேமிங் மற்றும் ஸ்ட்ரீமிங் நேரம் நீடித்து வழங்கப்படும்.

உங்களின் தேவை ஆதாரம் மற்றும் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு எந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம் என்பது இனி உங்கள் முடிவு.

Best Mobiles in India

English summary
Vivo V25 Pro 5G Vs OnePlus Nord 2T 5G: Which One is Worth For Money

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X