ஆரம்பமே அட்டகாச சலுகை.. Vivo V25 5G விற்பனை தொடக்கம்: மிஸ் பண்ணாதீங்க!

|

விவோ நிறுவனம் சமீபத்தில் புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. விவோ நிறுவனத்தின் ஸ்பெஷல் ஸ்மார்ட்போன் என்றே இதை குறிப்பிடலாம். காரணம் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள் இருக்கிறது.

இந்தியாவில் விவோ பிரியர்கள் பலரும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு என்றே காத்துக் கொண்டிருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல.

நிறம் மாறும் தன்மை கொண்ட பேனல்

நிறம் மாறும் தன்மை கொண்ட பேனல்

Vivo V25 5G ஸ்மார்ட்போன் இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனானது கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனில் Fluorite AG பேக் பேனல் இருக்கிறது. இது நிறம் மாறும் தன்மை கொண்டது. இதில் 6.44 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 90Hz ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்ன?

குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்ன?

இந்த ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து பார்க்கையில், Vivo V25 5G ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது எலெகன்ட் பிளாக் மற்றும் சர்ஃபிங் ப்ளூ ஆகும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியா இஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும். இது MediaTek Dimensity 900 SoC மூலம் இயக்கப்படுகிறது.

டூயல் வேரியண்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 64 எம்பி பிரதான கேமரா, 50 எம்பி செல்பி கேமரா, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4,500mAh பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

இரண்டு வேரியண்ட்களில் விற்பனை

இரண்டு வேரியண்ட்களில் விற்பனை

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் என்ற இரண்டு விருப்பத்தில் கிடைக்கிறது.

புதிய ஸ்மார்ட்போனின் விலை

புதிய ஸ்மார்ட்போனின் விலை

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

விவோ இந்தியா இ-ஸ்டோர், பிளிப்கார்ட் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலமாக இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய ஸ்மார்ட்போனுக்கான சலுகைகள்

புதிய ஸ்மார்ட்போனுக்கான சலுகைகள்

Vivo V25 5G ஸ்மார்ட்போனுக்கான சலுகைகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனை HDFC, SBI மற்றும் ICICI வங்கி கார்ட் மூலம் EMI பரிவர்த்தனைகளில் வாங்கும்பட்சத்தில் ரூ.2000 தள்ளுபடியை பெறலாம்.

அதேபோல் கூடுதல் பரிமாற்ற சலுகையாக விவோ இந்தியா இ-ஸ்டோர் தளத்தில் ரூ.2000 போனஸ் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட்டில் ரூ.4667 என்ற வீதம் 6 மாதம் செலுத்தும்பட்சத்தில் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும்.

எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகளும் கூடுதலாக கிடைக்கிறது. பரிமாற்றம் செய்யும் ஸ்மார்ட்போனின் தன்மை பொறுத்து இந்த தள்ளுபடிகள் கிடைக்கும்.

Vivo V25 5G சிறப்பம்சங்கள்

Vivo V25 5G சிறப்பம்சங்கள்

Vivo V25 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது டூயல் நானோ சிம் ஆதரவோடு ஆண்டராய்டு 12 அடிப்படையிலான Funtouch OS 12 மூலம் இயக்கப்படுகிறது.

6.44 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. 1,080x2,404 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவை இந்த டிஸ்ப்ளேக் கொண்டிருக்கிறது.

மேம்பட்ட குளிரூட்டும் சிஸ்டம்

மேம்பட்ட குளிரூட்டும் சிஸ்டம்

மீடியா டெக் டைமன்சிட்டி 900 SoC மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. ரேம் பவரை 8ஜிபி வரை விரிவாக்கம் செய்யலாம். மேம்பட்ட குளிரூட்டும் சிஸ்டம் மற்றும் கேம் பூஸ்ட் பயன்முறை இதில் இருக்கிறது.

Vivo V25 5G கேமரா அம்சங்கள்

Vivo V25 5G கேமரா அம்சங்கள்

Vivo V25 5G கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ லென்ஸ் ஆதரவு உள்ளது.

செல்பி ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 50 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Vivo V25 5G ஸ்மார்ட்போனில் 4,500mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் பக்காவாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால் இது சரியான தேர்வாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo V25 5G smartphone sale Started with exclusive offers: Price, Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X