Home
Mobile

50எம்பி செல்பி கேமராவுடன் வெளிவந்த Vivo V25 5G: நம்பி வாங்கலாமா?

விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக எந்த நிறுவனமும் இதுபோன்ற ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவில்லை. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் Fluorite AG பேக் பேனல் இருக்கிறது. இது நிறம் மாறும் தன்மை கொண்டது.

விவோ வி25 5ஜி

விவோ வி25 5ஜி

குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். சரி இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் என்னென்ன? என்ன விலை? நம்பி வாங்கலாமா, வேண்டாமா என்பதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

நிறங்கள்?

நிறங்கள்?

எலெகன்ட் பிளாக் மற்றும் சர்ஃபிங் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின கூடுதல் சிறப்பு என்னவென்றால்,நிறம் மாறும் அம்சத்துடன் வெளிவந்துள்ளது. எனவே இதுபோன்ற போன்களுக்கு கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும்.

டிஸ்பிளே எப்படி?

டிஸ்பிளே எப்படி?

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் இந்த போன் சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதேபோல் வீடியோ கேம், ஓடிடி-இல் திரைப்படம் போன்ற பல்வேறு பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாக பயன்படும்.

1,080x2,404 பிக்சல்ஸ், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், HDR10+ ஆதரவு, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ போன். கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே அனைவருக்கும் பிடிக்கும்.

கேமிங் சிப்செட்

கேமிங் சிப்செட்

கேமிங் பயனர்களுக்கு தகுந்த சிப்செட் வசதி இந்த விவோ வி25 5ஜி போனில் உள்ளது. அதாவது விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளது. இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் கொடுக்கும். அதேபோல் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

ஆண்ட்ராய்டு 12

பின்பு Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த விவோ போன். குறிப்பாக இந்த போனில் அதிக நேரம் கேம் விளையாடினாலும் சூடாகாது. குறிப்பாக அதற்கு தகுந்த மென்பொருள் தொழில்நுட்ப வசதி இதில் உள்ளது.

ரியல் கிரிக்கெட், டெம்பிள் ரன் போன்ற கேம்களை தடையின்றி விளையாட முடியும். குறிப்பாக அதிக நேரம் விளையாடினாலும் போன் சூடாகாது. இதன்
மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.

 கேமரா எப்படி?

கேமரா எப்படி?

விவோ வி25 5ஜி போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக குறைந்த வெளிச்சத்தில் கூட துல்லியமான படங்களை எடுக்க உதவுகிறது இந்த விவோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 50எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

அதாவது மற்ற நிறுவனங்களை விட விவோ நிறுவனம் எப்போது செல்பி கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதேபோல் இந்த விவோ வி25 5ஜி போனில்உள்ள 50எம்பி செல்பி கேமரா மூலம் தரமான படங்களை எடுக்க முடியும்.

 அசத்தலான பேட்டரி

அசத்தலான பேட்டரி

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கண்டிப்பாக அதிக நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ போன்.

அதேபோல் டூயல் பேண்ட் வைஃபை, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

நம்பி வாங்கலாமா, வேண்டாமா?

நம்பி வாங்கலாமா, வேண்டாமா?

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.27,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் ஒரு தரமான ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த விவோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo V25 5G Review in Tamil: Camera, Battery, Price, Availability Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X