5ஜி அமைப்பு, 44 எம்பி கேமரா உடன் வரும் விவோ புதுமாடல் ஸ்மார்ட்போன்: லீக்கான தகவல்!

|

விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு பதிப்பு, சிப்செட் மற்றும் ரேம் போன்ற சில விவரங்கள் பெஞ்ச்மார்க் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ விவோ இணையதளம் மூலம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் அதன் சில விவரக்குறிப்புகளை பிரத்யேக மைக்ரோசைட் தளம் வெளியிட்டுள்ளது.

விவோ வி21இ

விவோ வி21இ

சமீபத்தில் நிறுவனம் விவோ வி21இ என்ற சாதனத்தின் 4ஜி வேரியண்டை நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது வரவிருக்கும் விவோ வி23இ 5ஜி குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து கீக்பெஞ்ச் தரப்படுத்தல் தரவுத்தளத்தில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பதிப்பு, சிப்செட் உள்ளிட்ட தகவல்

ஆண்ட்ராய்டு பதிப்பு, சிப்செட் உள்ளிட்ட தகவல்

இதுகுறித்த 91 மொபைல்ஸ் அறிக்கையின்படி, விவோ வி21இ 5ஜி பதிப்புக்கான ஆண்ட்ராய்டு பதிப்பு, சிப்செட் மற்றும் ரேம் போன்ற சில விவரங்கள் பெஞ்ச்மார்க் பட்டியலில் காணப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ விவோ இணையதளம் வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பை வெளியிட்டது.

மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து கீக்பெஞ்ச் பட்டியல் தளத்தின் மூலம் கசிந்த தகவல்களை பார்க்கலாம். வரவிருக்கும் 5ஜி பதிப்புடன் மாடல் எண் வி2126 என காணப்படுகிறது. பட்டியலில் சாதனம் 5ஜி பதிப்பை கொண்டிருக்கும் என உறுதிப்பட தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இந்த செயலி 8 ஜிபி ரேம் உடன் வரும் எனவும் கூறப்படுகிறது. இது பல சேமிப்பு விருப்பங்கள் உடன் வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 உடன் ஃபன்டச் ஓஎஸ்

ஆண்ட்ராய்டு 11 உடன் ஃபன்டச் ஓஎஸ்

கீக்பெஞ்ச் பட்டியலில் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் சோதனைகளில் 471 புள்ளிகளையும் மல்டி கோர் சோதனைகளில் 1551 புள்ளிகளையும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 11 உடன் ஃபன்டச் ஓஎஸ் ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

விவோ வி23இ 5ஜி வடிவமைப்பு குறித்த கசிவுத் தகவலை பார்க்கும் போது, இந்த விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனானது பின்புறத்தில் மூன்று கேமராக்களை கொண்டிருக்கும் எனவும் 44 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் இடது மூலையில் செவ்வக கேமரா வடிவமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. வாட்டர் டிராப் நாட்ச் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த கேமரா தொகுதி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ சென்சார் ஆகியவற்றை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

டிப்ஸ்டரில் வெளியான தகவலின்படி, வரவிருக்கும் விவோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதே மாதிரியான சாதனங்களை ஒப்பிட்டு அதன் உடன் போட்டியிடும் வகையில் இதன் விலை வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் அடுத்தவாரம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் இந்த நிகழ்வில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

நவம்பர் 23 ஆம் தேதி வெளியீட்டு தேதி

நவம்பர் 23 ஆம் தேதி வெளியீட்டு தேதி

விவோ நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யவிருக்கும் புதிய Vivo Y76 5G ஸ்மார்ட்போனின் அறிமுக வெளியீட்டுத் தேதி வரும் நவம்பர் 23 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று நிறுவனம் உறுதி செய்துள்ளது. மலேசியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, Vivo இன் Y தொடரின் சமீபத்திய தொலைபேசியின் வடிவமைப்பு மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் டீஸர் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மூன்று வண்ண விருப்பங்கள்

மூன்று வண்ண விருப்பங்கள்

Vivo Y76 5G ஸ்மார்ட்போன் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. Vivo Y76 5G சீனாவில் Vivo Y76s 5G அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு வெளி வரும் என்று கூறப்படுகிறது. இரண்டு ஃபோன்களும் வடிவமைப்பில் ஒரே மாதிரியாக இருக்கின்றன, ஆனால் அவற்றின் விவரக்குறிப்புகள் வேறுபட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo Malaysia தனது Facebook கைப்பிடி மூலம் புதிய Vivo Y76 5G ஸ்மார்ட்போனின் வருகையை இப்போது டீஸ் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo V23E 5G Smartphone Specs Leaked by Geekbench Listing: Expected specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X