44எம்பி செல்பீ கேமராவுடன் விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் புதிய விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மிட்நைட் ப்ளூ மற்றும் சன்ஷைன் கோல்ட் நிறத்தில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இப்போது இந்த விவோ வி23இ 5ஜிஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு
1080 x 2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த
அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

இந்த விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்ப ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்குஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாககொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமராஎன மொத்தம் மூன்றுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பிகேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

புதிய விவோ வி23இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 44 வாட் பாஸ்ட் சார்ஜிங்வசதி, ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட வைஃபை, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி-சி சார்ஜ் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.25,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications