டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.!
விவோ நிறுவனம் வரும் ஜனவரி 5-ம் தேதி புதிய விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் டூயல் செல்பீ கேமரா மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த விவோ 23 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2376 பிக்சல் தீர்மானம்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த
அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1200 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சாதனம் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேமிங் வசதிகளுக்கு தகுந்தபடி இந்தசாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்கமுடியும்.

விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல்.

5ஜி, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்,3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகிய பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ வி23 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications