இந்தியாவில் விற்பனைக்கு வந்த விவோ வி23 ப்ரோ 5ஜி- 50 எம்பி செல்பி கேமரா, 44வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் வசதி!

|

விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை தேதி குறித்த விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட்டில் ஜனவரி 17 டெலிவரி தேதியுடன் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் முதல் முறையாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

ஃப்ளோரைட் ஏஜி கிளாஸ் பின்புற அமைப்பு

ஃப்ளோரைட் ஏஜி கிளாஸ் பின்புற அமைப்பு

இந்த சாதனமானது ஃப்ளோரைட் ஏஜி கிளாஸ் பின்புற அமைப்போடு வருகிறது. இந்த சாதனத்தின் பின்புற பேனலில் அல்ட்ரா வயலெட் ஒளியில் காட்டப்படும் வெளியீட்டு நிறம் மாறும் என நிறுவனம் தெரிவிக்கிறது. விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட்டது. விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது ஜனவரி 14 என்ற டெலிவரி தேதியுடன் முன்பதிவு செய்யலாம். அதேபோல் விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது தற்போது முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கிறது. பிளிப்கார்ட் டெலிவரி தேதி ஜனவரி 17 என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விலை மற்றும் கிடைக்கும் தன்மை

விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.29,990 ஆகவும் அதே சமயத்தில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.34990 ஆகவும் இருக்கிறது. அதேபோல் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.38,990 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.43990 ஆகவும் இருக்கிறது.

ஆரம்ப டெலிவரி தேதி விவரங்கள்

ஆரம்ப டெலிவரி தேதி விவரங்கள்

விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் இரண்டும் ஸ்டார்டஸ்ட் பிளாக் மற்றும் சன்ஷைன் கோல்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் சில்லறை சேனல்கள் மூலமாக ஸ்மார்ட்போனை வாங்கலாம். இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்ட தேதியில் இருந்தே முன்கூட்டிய ஆர்டருக்கு கிடைக்கின்றன. முன்னதாகவே குறிப்பிட்டுள்ளபடி விவோ வி23 5ஜி திங்கட்கிழமை என்ற டெலிவரி தேதியுடன் ஆர்டர் செய்யலாம், பிளிப்கார்ட் பட்டியலின் படி, விவோ வி23 ப்ரோ 5ஜி சாதனத்தின் ஆரம்ப டெலிவரி தேதி ஜனவரி 17 என பட்டியலிடப்பட்டுள்ளது.

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இரட்டை சிம் (நானோ) ஆதரவோடு, 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் வி5.2 இணைப்பை வழங்குகின்றன. அதேபோல் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது.

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா உடன் வருகிறது. முன்பக்கத்தில் இந்த விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா என இரட்டை செல்பி கேமரா வசதியை கொண்டுள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி வசதி

மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி வசதி

விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 எஸ்ஓசி வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.56 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,376 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 108 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. பிற அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போன் வெண்ணிலா மாடல் அம்சங்களை போன்றே இருக்கிறது.

அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்கள்

அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்கள்

விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்கள் உடன் வருகிறது. விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது 4200 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. அதேபோல் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 4300 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு வருகிறது. விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஆனது 44 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவோடு வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகின்றன. இது ஃபன்டச் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது 179 கிராம் எடையும், விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 171 கிராம் எடையோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V23 Pro 5G Listed For Sale in Flipkart, Vivo V23 5G Pre Orders Start- Price, Offer Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X