Home
Mobile

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விலை இதுதான்: அறிமுகத்துக்கு முன் வெளியான அம்சங்கள்!

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை உள்ளிட்ட விவரங்களை முழுமையாக பார்க்கலாம். விவோ தனது ஸ்மார்ட்போன்களை பல்வேறு விலைப்பிரிவில் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி விவோ நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் முதல் ஸ்மார்ட்போனாக விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி சாதனத்தை அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த பல்வேறு விவரக்குறிப்புகள் தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகி வருகின்றன. விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களானது 5ஜி இயக்கப்பட்ட சாதனமாக இருக்கும் எனவும் இது உயர்தர அம்சங்களோடு வரும் எனவும் கூறப்படுகிறது. விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிற விவரங்களை பார்க்கலாம்.

விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி

விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி

விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ வி23 5ஜி தொடர் ஸ்மார்ட்போன்கள் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்னதாக அதன் ஸ்டோர் தளத்தில் விலை தகவல்களுடன் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோவின் அடுத்த 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள் உயர்தர தயாரிப்புகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு

12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு

விவோ வி23 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் 256 ஜிபி உள்சேமிப்பு வதசியோடு கிடைக்கிறது. 108 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி முன்புற செல்பி கேமராக்களுடன் வருகிறது. விஜய் விற்பனையில், விவோ வி23 5ஜி மற்றும் விவோ வி23 ப்ரோ 5ஜி ஆகியவற்றின் பட்டியல்களின் சில ஸ்க்ரீன்ஷாட்களை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் டுவிட் செய்துள்ளார். ஆனால் இந்த தகவல் வெளியான போது இந்த தகவல் அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்

இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்கள்

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை விவரங்களை பார்க்கலாம். விவோ வி23 5ஜி-ன் விலை ஸ்கிரீன்ஷாட்கள் அடிப்படையில் பார்க்கும் போது, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.31990 ஆகவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் ரூ.35990 என இருக்கிறது. விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு மாடலின் விலை ரூ.41990 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.45990 ஆக இருக்கிறது. விவோ வி23 5ஜி சாதனமானது ஸ்டார்டஸட் பிளாக் வண்ணத்திலும், விவோ வி23 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் சன்ஷைன் கோல்டு நிறத்திலும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

 விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விவரக்குறிப்புகள்

விவோ வி23 5ஜி, விவோ வி23 ப்ரோ 5ஜி விவரக்குறிப்புகள்

விவோ வி23 5ஜி தொடர் இந்தியாவில் ஜனவரி 5 ஆம் தேதி வெளியடப்படும் என விவோ முன்னதாக கூறப்படுகிறது. அதேபோல் விவோ வி23 5ஜி ஆனது நிறத்தை மாற்றும் பின்புற பேனலை கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வ வணிக வலைதளமான பிளிப்கார்ட்டில் தற்போது நேரலையில் இருப்பதாக கூறப்படுகிறது. விவோ வி23 ப்ரோ 5ஜி விவரக்குறிப்புகள் குறித்த தகவல்களை பார்க்கலாம், விவோ வி23 ப்ரோ 5ஜி ஆனது அல்ட்ரா ஸ்லிம் 3டி வளைந்த டிஸ்ப்ளேவை வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. விவோ வி23 5ஜி சாதனம் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 1200 5ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vivo V23 5G, Vivo V23 Pro 5G Smartphone's India Price Revealed: Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X