ஜூன் 24: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான விவோ வி21இ 5ஜி.!
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் ஜூன் 24-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில விவரங்களை இப்போது பார்ப்போம்.

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும்என்றுகூறப்படுகிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம்வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

32எம்பி செல்பீ கேமரா
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே 64எம்பி ரியர் கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட்
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4500 எம்ஏஎச் பேட்டரி
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + குளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த விவோ வி21இ 5ஜி மாடல்.

அதேபோல் விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ரூ.24,900-விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications