அசத்தலான அம்சங்களுடன் விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
விவோ நிறுவனம் மிகவும் எதிர்பார்த்த விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அமேசான், பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் போன்ற தளங்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் சன்செட் ஜாஸ் மற்றும் டார்க் பேர்ல்
நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த சாதனம். இப்போது விவோ வி21இ 5ஜி சாதனத்தின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

AMOLED டிஸ்பிளே
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.மேலும் 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது
இந்த அட்டகாசமான சாதனம்.

32எம்பி செல்பீ கேமரா
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லெனஸ் கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

Dimensity 700 சிப்செட்
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 700 சிப்செட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4000 எம்ஏஎச் பேட்டரி
விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். அதேபோல் இந்த சாதனத்தை 30 நிமிடங்களில் 72 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.

விவோ வி21இ 5ஜி விலை
5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, மற்றும் ஜிபிஎஸ், டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.24,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications