Home
Mobile

அமேசான்: விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

அமேசான் தளத்தில் விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 128ஜிபி மெமரி கொண்ட

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.27,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் இப்போது அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.24,990-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

த விவோ வி21இ 5ஜி

இந்த விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுவெளிவந்துள்ளது இந்த அசத்தலான விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன்.

 விவோ வி21இ 5ஜி

இந்த விவோ வி21இ 5ஜி சாதனத்தின் பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. அதாவது 64எம்பி பபிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லெனஸ் கேமரா என இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பல்வேறு சிறப்பான கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன்.

ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க

அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது விவோ வி21இ 5ஜி மாடல். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட்

குறிப்பாக மீடியாடெக் Dimensity 700 சிப்செட் ஆதரவுடன் வெளிவந்துள்ளது விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். பின்பு FunTouchOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

4000 எம்ஏஎச் பேட்டரி

விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. மேலும் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற பல அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் 44 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால் மிக விரைவில் சார்ஜ் செய்ய முடியும். 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1, மற்றும் ஜிபிஎஸ், டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி21இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.மேலும் அமேசான் தளத்தில் சாம்சங், ரியல்மி, ஒன்பிளஸ் உட்பட பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவோ நிறுவனம் விரைவில் பல்வேறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo V21e 5G Gets Price Cut in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X