இந்தியாவில் அதே தேதியில் அறிமுகமா?- கேமராவில் ஒரு டுவிஸட் உடன் வரும் விவோ வி21 சீரிஸ்!

|

மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள விவோ வி21 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. விவோ வி21 எஸ்இ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விவோ வி21 சீரிஸ் ஸ்மார்ட்போன்

விவோ வி21 சீரிஸ் ஸ்மார்ட்போன்

விவோ வி21 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. விவோ வி21 சீரிஸ்-ல் இடம்பெறும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கையில், இதில் வெண்ணிலா விவோ வி21, விவோ வி21இ இருக்கும் எனவும் இதில் விவோ வி21 எஸ்இ மாடலும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

ப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம்

ப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம்

நிறுவனம் விவோ வி21 ஸ்மார்ட்போனை ஏப்ரல் 27 ஆம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் டுவிட் மூலம் தெரிவிக்கப்பட்டது. விவோ வி21 தொடர் ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் இடம்பெறும் எனவும் இதில் விவோ வி21இ ஆகியவை அடங்கும் எனவும் கூறப்படுகிறது.

கூகுள் ப்ளே கன்சோல் பட்டியல்

அதேபோல் விவோ நிறுவனம் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. இருப்பினும் மலேசியாவில் அறிமுகமாகும் அதே ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலில் காணப்பட்ட விவோ வி21 எஸ்இ தொடரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

44 மெகாபிக்சல் செல்பி கேமரா

விவோ நிறுவனம் விவோ வி21 தொடர் குறித்து டீஸ் செய்துள்ளது. அதில் விவோ வி21 தொடரில் விவோ வி21 மற்றும் விவோ வி21இ ஆகியவை அடங்கும் எனவும் இவை மலேசியாவில் வெளியிடப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்தது. மேலும் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் சில தகவல்களை பகிர்ந்தது. அதில் விவோ வி21 தொடரில் இடம்பெறும் சில அம்சங்களை மைக்ரோசைட் வெளிப்படுத்தியது. விவோ வி21 ஸ்மார்ட்போனானது 44 மெகாபிக்சல் செல்பி கேமராவை கொண்டிருக்கும் எனவும் இவை குறைந்த வெளிச்சத்தில் சிறந்த செல்பி தரத்தை வெளிப்படுத்தும் எனவும் இதில் இரட்டை பிளாஷ் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் விவோ வி21 ஸ்மார்ட்போன் இரட்டை 5ஜி ஆதரவு மற்றும் 8ஜிபி ரேம் வரும் என்பது உறுதிப்பட தகவலாக இருக்கிறது. அதேபோல் விவோ வி21 ஸ்மார்ட்போன் இதே அம்சத்தில் வருமா என்பது குறித்து தகவல் உறுதியாகவில்லை.

மெலிதான 5ஜி ஸ்மார்ட்போன்

மேலும் விவோ வி21 தொடர் ஸ்மார்ட்போன்கள் மெலிதான 5ஜி ஸ்மார்ட்போனாக சந்தைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேப்லைசேஷன் வசதியோடு 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது இடம்பெறும் மாடல்கள் குறித்த தகவல் தெரியவில்லை.

அதே தேதியில் இந்தியாவில் அறிமுகம்

அதே தேதியில் இந்தியாவில் அறிமுகம்

ஆனால் விவோ வி21 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு மலேசியாவில் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிடப்படும் அதேநாளில் வெளியாகும் என தொழில்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் வேறு சில தகவல்களும் இந்தியாவில் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என உறுதிப்படுத்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.25,000 என இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

அதேபோல் டிஸ்ப்ஸ்டரில் வெளியான தகவலின்படி, விவோ வி21 ஸ்மார்ட்போனானது 8ஜிபி ரேம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V21 Series May Launching on April 21 in India: Expected Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X