இது நியோன் ஸ்பார்க்- லுக் அப்படி இருக்கு: 44 எம்பி செல்பி கேமரா உடன் விவோ வி21 5ஜி- பிளிப்கார்ட்டில் வாங்கலாம்

|

விவோ வி21 5ஜி-ன் புதிய நியான் ஸ்பார்க் வகைகள் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இது ப்ரீமியம் நடுத்தர ரேஞ்ச் சாதனமாக 5ஜி நெட்வொர்க் இணைப்புடன் இந்தாண்டு ஏப்ரல் மாதம் நாட்டில் அறிவிக்கப்பட்டது. புதிய மாடல் ஒரு புதிய சருமத்தை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் மீதமுள்ள அமைப்புகள் அதே வகையில் வரும் எனவும் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்த பிறகு நாளை இந்த ஸ்மார்ட்போன் விற்பனை வரும் எனவும் கூறப்படுகிறது.

விவோ வி21 5ஜி நியான் ஸ்பார்க் விலை

விவோ வி21 5ஜி நியான் ஸ்பார்க் விலை

இந்தியாவில் விவோ வி21 5ஜி நியான் ஸ்பார்க் விலை குறித்து பார்க்கையில், விவோ வி21 5ஜி நியான் ஸ்பார்க் பிளிப்கார்ட் பட்டியலில் முழு அம்சங்கள் மற்றும் விலையை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு உள்ளமைவுகளில் கிடைக்கும். இதன் அடிப்படை மாடல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டிருக்கும் எனவும் இதன் விலை ரூ.29,990 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

விவோ வி21 5ஜி நியான் ஸ்பார்க் சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

விவோ வி21 5ஜி நியான் ஸ்பார்க் சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

விவோ வி21 5ஜி நியான் ஸ்பார்க் ஸ்மார்ட்போன்களானது 6.44 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1080 பிக்சல் தீர்மானத்துடன் முழு எச்டி ப்ளஸ் அம்சத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இது கைரேகை ஸ்கேனர் அம்சத்தை கொண்டிருக்கும் எனவும் டைமன்சிட்டி 800 யூ செயலி உடன் இணைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

44 மெகாபிக்சல் செல்பி கேமரா

44 மெகாபிக்சல் செல்பி கேமரா

நியான் ஸ்பார்க் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்டிருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமராவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடனான ஃபன் டச் ஓஎஸ் 11.1 யூஐ உடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

OIS ஆதரவு, டூயல் எல்இடி பிளாஸ் ஆதரவு

OIS ஆதரவு, டூயல் எல்இடி பிளாஸ் ஆதரவு

இந்த விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும். விவோ வி21 5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி செல்பீ கேமரா
இடம்பெற்றுள்ளது. இது தவிர OIS ஆதரவு, டூயல் எல்இடி பிளாஸ் ஆதரவும் இந்த சாதனத்தில் அடக்கம்.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ வி21 5ஜி சாதனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V21 5G Neon Spark Variants Now Available at Flipkart in India: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X