44எம்பி செல்பீ கேமரா வசதியுடன் விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி21 5ஜி ஸமார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் 44எம்பி செல்பீ கேமரா, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, Dimensity 800U பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

விவோ வி21 5ஜி சாதனம்
மேலும் விவோ வி21 5ஜி சாதனம் ஆனது வரும் மே 6-ம் தேதி பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா இ-ஸ்டோர் போன்ற வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று முதல் இந்த சாதனத்தை முன்பதிவு செய்ய முடியும். ஆர்க்டிக் ஒயிட்,சன்செட் டாஸ்ல் மற்றும் டஸ்க் ப்ளூ உள்ளிட்ட நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ வி21 5ஜி சாதனம்.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2404 பிக்சல் தீர்மானம், 800 nits பிரைட்நஸ் வசதி, எச்டிஆர் +, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை
கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

மீடியாடெக் Dimensity 800U பிராசஸர் வசதி
குறிப்பாக விவோ வி21 5ஜி சாதனத்தில் மீடியாடெக் Dimensity 800U பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

44எம்பி செல்பீ கேமரா
விவோ வி21 5ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி மெயின் சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோ கால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி செல்பீ கேமரா
இடம்பெற்றுள்ளது. இது தவிர OIS ஆதரவு, டூயல் எல்இடி பிளாஸ் ஆதரவும் இந்த சாதனத்தில் அடக்கம்.

4000 எம்ஏஎச் பேட்டரி
விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ வி21 5ஜி சாதனம். மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி21 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது. பின்பு இதன் 256ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.31,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications