டூயல் 5ஜி சிம் உடன் உருவாகும் புதிய விவோ ஸ்மார்ட்போன்.. இன்னும் என்னவெல்லாம் இருக்கு இதில்?

|

விவோ நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு ஸ்மார்ட்போன் டூயல் 5ஜி சிம் ஆதரவைக் கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. விவோவின் இந்த இரண்டு பெயர் வெளியிடப்படாத ஸ்மார்ட்போன் மாடல்கள் TENAA சான்றிதழ் இணையதளத்தில் காணப்பட்டுள்ளது. வெளியான பட்டியல்களின்படி, மாடல் எண் V2069A கொண்ட ஸ்மார்ட்போன் டூயல் சிம் 5 ஜி உடன் அறிமுகப்படுத்தப்படலாம். அதே நேரத்தில், V2066A என்ற மாடல் எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போன் டூயல் சிம் 4 ஜி அம்சத்தை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விவோவின் V2066A மற்றும் V2069A மாடல்

விவோவின் V2066A மற்றும் V2069A மாடல்

ஸ்மார்ட்போன்களில் ஒன்று பட்ஜெட் மாடலாகத் தெரிந்தாலும், மற்றொன்று கசிந்த விவரக்குறிப்புகளுக்கு மிட் ரேஞ்சர் மாடலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. V2066A ஒரு செவ்வக வரிசையில் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது மற்றும் V2069A மாடல் எண்ணைக் கொண்ட சாதனம் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை நாஷ்வில் சாட்டரில் இருந்து வெளிவந்துள்ளது. இதன் விவரக்குறிப்புகள் TENAA பட்டியல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

V2069A மாடலின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச தகவல்

V2069A மாடலின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச தகவல்

மாடல் எண் V2069A கொண்ட ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட 1080 x 2408 பிக்சல்கள் உடைய எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது பெயர் அறியப்படாத 2.2GHz ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவர வாய்ப்புள்ளது.

ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையே இல்ல: இனி இந்த 18 சேவைகளும் ஆன்லைன் மூலம்தான்!

டூயல் கேமரா அமைப்பு

டூயல் கேமரா அமைப்பு

ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமரா கொண்ட டூயல் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இது 4,910 எம்ஏஎச் பேட்டரியை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சரியான பெயர் மற்றும் எதிர்பார்க்கப்படும் விலை போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

V2066A விவரக்குறிப்புகள் (வதந்தி)

V2066A விவரக்குறிப்புகள் (வதந்தி)

மாடல் எண் V2066A கொண்ட ஸ்மார்ட்போன் சற்று சிறிய 6.51 இன்ச் எச்டி பிளஸ் 720 x 1600 பிக்சல்கள் கொண்ட எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதுவும் பெயர் அடையாளம் தெரியாத 2.0GHz ஆக்டா கோர் சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பின்புறத்தில் மூன்று பின்புற கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..

ட்ரிபிள் கேமரா அமைப்பு

ட்ரிபிள் கேமரா அமைப்பு

இந்த ஸ்மார்ட்போனில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், இரண்டு 2 மெகாபிக்சல் கேமராக்களும் இருக்க வேண்டும். முன்பக்கத்தில், இது 8 மெகாபிக்சல் சென்சாரை கொண்டிருக்கலாம். இந்த புதிய ஸ்மார்ட்போன் 4,910 எம்ஏஎச் பேட்டரியை பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் ஆதரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய கூடுதல் தகவல்களை நாம் அடுத்து வரும் வாரங்களில் தெரிந்துகொள்ளலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V2069A V2066A spotted TENAA website out of which one seems to be dual SIM 5G smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X