64MP டிரிபிள் கேமராவுடன் விவோ V2031EA அறிமுகமா?- லீக்கான தகவல்!

|

விவோ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் விவோ V2031EA ஆக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த தகவல் Tenna இணையதளத்தில் பட்டியிலிடப்பட்டுள்ளது.

5ஜி அம்ச ஸ்மார்ட்போன்

5ஜி அம்ச ஸ்மார்ட்போன்

விவோ 5ஜி அம்ச ஸ்மார்ட்போனை நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இது விவோ V2031EA ஸ்மார்ட்போன் ஆக இருக்கலாம் என TENAA இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு இந்த இணையதளத்தில் ஸ்மார்ட்போன் வடிவமைப்பு, கேமராக்கள் உள்ளிட்ட பலவற்றை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

விவோ வி 2031EA விவரங்கள்

விவோ வி 2031EA விவரங்கள்

TENAA வெளியிட்டுள்ள தகவலின்படி, ஸ்மார்ட்போன் நீல வண்ண விருப்பத்தில் இருக்கும். 6.44 அங்குல முழு எச்டி+ (1080 x 2400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். அதோடு 2.4GH ஆக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படும். இதில் ஸ்னாப்டிராகன் 765 5G SoC பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு விருப்பங்கள் உள்ளிட்ட இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என பட்டியிலிடப்பட்டுள்ளது.

4,020 mAh பேட்டரி

4,020 mAh பேட்டரி

வேகமாக சார்ஜிங் அம்சத்தோடு ஸ்மார்ட்போனில் 4,020 mAh பேட்டரி உள்ளது என தகவல் தெரிவிக்கிறது. விவோ வி 2031EA ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இடம்பெறும், இதில் 64 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி செகண்டரி சென்சார் மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் போன்ற ஆப்.. இப்பொழுது பிளே ஸ்டோரில்..இந்திய ராணுவம் உருவாக்கியுள்ள வாட்ஸ்அப் போன்ற ஆப்.. இப்பொழுது பிளே ஸ்டோரில்..

டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இருக்கும் எனவும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், லைட் பில்டர் சென்சார் ஆகியவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 161x 74.04 x 7.73 மிமீ பரிமாணங்களையும் 171.7 கிராம் எடையையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிம்பல் கேமரா அமைப்பு

கிம்பல் கேமரா அமைப்பு

TENNA தகவலின்படி கேமரா தொகுதி இடது மூலையில் இருக்கும். கேமரா அமைப்பில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது விவோ எக்ஸ் 50 ப்ரோவில் கிடைக்கும் கிம்பல் கேமரா அமைப்பைப் பெறக்கூடும் எனவும் கூறப்படுகிறது. அதோடு விவோ எக்ஸ் 50 ப்ரோ ரூ.49,990 ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo V2031EA Spotted on TENNA's Website: Expected Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X