Home
Mobile

விவோ வி 20 தொடர் இந்த வழியாக தான் இந்தியாவில் அறிமுகம்!

விவோ வி 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு குறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. விவோவ V20 சீரிஸ் வெளியீட்டு தேதி நேற்று கசிந்தது, இப்போது நிறுவனம் பிளிப்கார்ட் தளத்தில் விவோ V20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் கிடைக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.

விவோ வி 20 தொடர் இந்த வழியாக தான் இந்தியாவில் அறிமுகம்!

விவோ V20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் அக்டோபர் 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிளிப்கார்ட்டில் விவோ வி 20 தொடருக்கான 'Notify Me' விருப்பமும் தற்பொழுது நேரலையில் உள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டில் 'Notify Me' விருப்பத்தைத் தேர்வுசெய்து சாதனத்தில் நிகழ்நேர அப்டேட்களை பெறலாம், விலை நிர்ணயம், சலுகைகள் போன்ற தகவல்களை அறிய Notify Me கிளிக் செய்யுங்கள்.

விவோ வி 20 சீரிஸ் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்துடன் வெளிவரும் முதல் சாதனம் என்பதையும் விவோ வெளிப்படுத்தியுள்ளது. இந்த வரிசையில் விவோ வி 20 மற்றும் விவோ வி 20 புரோ 5 ஜி மற்றும் விவோ வி 20 எஸ்இ ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், விவோ நிறுவனம் சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த ஒரு நிகழ்வில் விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20 ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதேபோல், இந்நிறுவனம் மலேசியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் வி 20 தொடரின் கீழ் விவோ V20 SE ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் விவோ நிறுவனம் என்ன மாடலை அறிமுகம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

விவோ V20 SE விவரக்குறிப்புகள்

  • 6.44' இன்ச் உடன் கூடிய 1080 x 2400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே
  • 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 20: 9 விகித அளவு
  • அட்ரினோ 610 ஜி.பீ.யூ
  • 2GHz ஸ்னாப்டிராகன் 665 11nm பிராசஸர்
  • Funtouch OS 11 உடன் ஆண்ட்ராய்டு 10
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 1TB வரை மைக்ரோ எச்டி ஸ்டோரேஜ்
  • டிரிபிள் கேமரா அமைப்பு
  • 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமரா
  • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
  • எல்இடி ஃபிளாஷ்
  • 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
  • 33W பாஸ்ட் சார்ஜிங்
  • 4000 எம்ஏஎச் பேட்டரி

விவோ V20 ப்ரோ விவரக்குறிப்புகள்

  • 6.44' இன்ச் கொண்ட 1080 x 2400 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் அமோலேட் டிஸ்ப்ளே
  • அட்ரினோ 620 ஜி.பீ.யு
  • 2.2GHz ஸ்னாப்டிராகன் 765G 7nm பிராசஸர்
  • Funtouch OS 11 உடன் ஆண்ட்ராய்டு 10
  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா
  • 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்.
  • 44 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் 105 ° அல்ட்ரா-வைட் கொண்ட டூயல் செல்ஃபி கேமரா
  • 33W பாஸ்ட் சார்ஜிங்
  • 4000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Vivo V20 series confirmed to launch in India via Flipkart : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X