இந்தியாவில் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?
விவோ நிறுவனத்தின் புதிய விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிந்துள்ளது.

மேலும் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது Aquamarine Green மற்றும் Gravity Blackஎன்ற இரண்டு நிறங்களில்கிடைக்கும். மேலும் நாளை முதல் விவோ இ-ஸ்டோர் மறறும் சில ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன். இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,990-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனங்களை வாங்கினால் 10 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும். பின்பு ஜியோ நிறுவனம் சார்பிலும் இந்த சாதனத்திற்கு குறிப்பிட்ட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1,080x2,400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ வி20 எஸ், ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, போர்ட்ரேட் பயன்முறை, சூப்பர் நைட் செல்பி, செல்பி ஃபில் லைட், பேஸ் பியூட்டி உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications