விரைவில் 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்.!
அண்மையில் விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

வெளிவந்த MySmartPrice தகவலின்படி, விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிசேமிப்பு வசதியுடன் ரூ.20,990-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Gravity Black நிறத்தில் இந்த விவோ வி20 எஸ்இ சாதனம் வெளிவரும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate, 20:9 என்கிற திரை விகிதம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 665 11என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு அட்ரினோ 610 ஜிபியு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும். பினபு கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 10 உடன் Funtouch OS 11 கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் வி 5, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன். கண்டிப்பாக இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலும் நல்ல வரவேற்பை பெரும்.


Click it and Unblock the Notifications