விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
விவோ நிறுவனம் தனது விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடலை மலேசிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது மூன்று ரியர் கேமரா ஆதரவு, சிறந்த மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன்
வெளிவந்துள்ளது. விரைவில் இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1,080x2,400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ வி20 எஸ், ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, போர்ட்ரேட் பயன்முறை, சூப்பர் நைட் செல்பி, செல்பி ஃபில் லைட், பேஸ் பியூட்டி உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளிட்ட பல வசதிகளை
கொண்டுள்ளது இந்த விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன்

விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை(இந்திய மதிப்பில்) ரூ.21,300-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications