Home
Mobile

அக்வாமரைன் க்ரீன் நிறத்தில் Vivo V20 SE ஸ்மார்ட்போன் அறிமுகம்.! சிறப்பு சலுகையும் உண்டு.!

இந்தியாவில் தற்சமயம் விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது புதிய அக்வாமரைன் கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய அக்வாமரைன் கிரீன் கலர் மாறுபாடு இன்று முதல் விவோ இந்தியாவின் இ-ஸ்டோர், ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகளின் வழியாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி 20 எஸ்இ

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. மேலும் விவோ இ-ஸ்டோர் மற்றும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கமுடியும்.

 80 சதவீதம்

இந்த சாதனத்திறகு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இ-ஸ்டோரில் சிசி / சிசி இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஐசிஐசிஐ வங்கியுடன் 10 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். அதேபோல் கோட்டக் மஹிந்திரா வங்கியில் சிசி ரெகுலர் & சிசி / DC EMI பரிவர்த்தனைகள் மீது 105 கேஷ்பேக், மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஒரு முறை ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்ட் விருப்பம் போன்றவைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எந்தவொரு பழைய ஸ்மார்ட்போன் மீதும் ரூ.1,500 வரை எக்ஸ்சேன்ஜ் போனஸ், விவோ மேம்படுத்தல் பயன்பாட்டின் கீழ் 80 சதவீதம் வரை பை பேக் உறுதி போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-

விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் 1,080x2,400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம்

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த விவோ வி20 எஸ், ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பின்புறம் 48எம்பி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் +8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 2எம்பி சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, போர்ட்ரேட் பயன்முறை, சூப்பர் நைட் செல்பி, செல்பி ஃபில் லைட், பேஸ் பியூட்டி உள்ளிட்ட ஆதரவுகளும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கொண்டு 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

 வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் /

4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் சுற்றுப்புற ஒளி சென்சார் உள்ளிட்ட பல வசதிகளை கொண்டுள்ளது இந்த விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போன்.

 ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச்

விவோ வி 20 எஸ்இ ஸ்மார்ட்போனில் 4100 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்காசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Vivo V20 SE Aquamarine Green Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X