மூன்று கேமராக்களுடன் வெளிவந்த விவோ வி20 ஸ்மார்ட்போன்.! விமர்சனம்.!
விவோ நிறுவனம் அண்மையில் தனது புதிய விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. மேலும் தனித்துவமான வடிவமைப்பு, அசத்தலான கேமரா வசதி, சிறந்த மென்பொருள் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் சாதனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் இந்த சாதனம் அறிமுகமாகியுள்ளது. அதேசமயம் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் விலையும் விவோ வி20 ஸ்மார்ட்போனின் விலையும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் மற்றும் விவோ.காம் போன்ற தளங்களில் கிடைக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்ங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த சாதனம் AMOLED பேனல் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக சில ஆன்லைன்கேம் விளையாடுவதற்கு இந்த ஸ்மார்ட்போன் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பது தான் உண்மை.

விவோ வி20 ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். தற்சமயம் ஒரு சில சாதனங்களில் மட்டுமே ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. அந்த வரிசையில் விவோ வி20 ஸ்மார்ட்போனிலும் இந்த இயங்குதளம் இருப்பதால் கூடுதல் நண்மைகளை பெறமுடியும். குறிப்பாக இதன் மென்பொருள் அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ வி20 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி ஆகிய மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை எடுக்க முடியும். குறிப்பாக 64எம்பி கேமரா கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் வெளிப்புறங்களில் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் பேட்டரி மட்டும் எதிர்பர்த்த அளவுக்கு இல்லை என்றே கூறலாம். விவோ வி20 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி20 ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலையில் விற்பனைக்கு வரும். அதேபோல 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி20 மாடல் ரூ.27,990-விலையில் விற்பனைக்கும் வரும்.


Click it and Unblock the Notifications