Just In
- 1 hr ago
Mi 11 மற்றும் Mi 11 Lite ஸ்மார்ட்போனின் இந்தியப் பதிப்பு பற்றிய முக்கிய தகவல்.. அறிமுகம் எப்போ?
- 3 hrs ago
4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Micromax In Note1: ரூ.9,999 என்ற தள்ளுபடி விலையில்- குறுகிய காலத்திற்கு
- 3 hrs ago
தினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா? அப்போ, இதுதான் சரியான திட்டம்..
- 5 hrs ago
ஜனவரி 21 அமேசான் குவிஸ் பதில்கள்: Philips Induction Cooktop வெல்ல அரிய வாய்ப்பு?
Don't Miss
- Movies
காதலியை கரம் பிடிக்கிறார்.. வரும் 24 ஆம் தேதி பிரபல ஹீரோ திருமணம்.. உறுதி செய்த நடிகர்!
- News
10 அமைச்சர்கள் ஜம்பாகிறாங்க... அவருகூட விசாரிச்சார்....இவரும்தான்....அடேங்கப்பா அதிமுக கிசுகிசுக்கள்
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?
- Finance
ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..!
- Sports
1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி
- Automobiles
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
- Lifestyle
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நவம்பர் 25: இந்தியாவில் களமிறங்கும் அசத்தலான Vivo V20 Pro.!
அண்மையில் தாய்லாந்து நாட்டில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் அருமையான தொழில்நுட்ப வசதி மற்றும் அட்டகாசமான கேமராக்களுடன் வெளிவந்தது. இந்நிலையில் வரும் நவம்பர் 25-ம் தேதி விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த பின்பு, இதை குறிப்பிட்ட வங்கி கார்டுகளை கொண்டு முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவிகிதம் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என ட்விட்டர் வழியாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே விவோ வி 20, விவோ வி 20 எஸ்இ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும், கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விவோ வி 20 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ 20 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் 11 இல் இயங்குகிறது. இது 6.44 அங்குல முழு எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே ஆதரவுடன் உள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..

விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் வைடு லென்ஸ் + 2 மெகா பிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் உள்ளிட்ட மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் முன்பக்கத்தில் 44 எம்பி முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் என இரட்டை செல்பி கேமரா வசதி உள்ளது.

விவோ வி 20 ப்ரோ 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மமார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த சாதனம் 4,000 mAh பேட்டரியுடன் வருகிறது, இது 33W ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 64 எம்பி கேமரா இருப்பதால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த சாதனத்தின் அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாகவே உள்ளது. ஆனால் 4000 ஏம்ஏஎச் பேட்டரிக்கு பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த சாதனம் வெளிவந்திருந்தால் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்திருக்கும்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190