8ஜிபி ரேம் கொண்ட விவோ வி20 ப்ரோ அறிமுகத்துக்கு முன் கசிந்த விலை: எவ்வளவு தெரியுமா?

|

விவோ வி 20 ப்ரோ டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே விவோ வி 20 ப்ரோ விலை ஆன்லைனில் கசிந்துள்ளது.

விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன்

விவோ வி20 ப்ரோ ஸ்மார்ட்போன்

விவோ வி20 ப்ரோ டிசம்பர் 2 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மாரட்போன் பல சில்லறை விற்பனை தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ வி20 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்போடு ரூ.29,990 என்ற விலையில் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரூ.29,999 விலை என தகவல்

ரூ.29,999 விலை என தகவல்

இதுகுறித்து மைஸ்மார்ட் பிரைஸ் அறிக்கையின்படி, ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட பல ஸ்மார்ட்போன் தளங்களில் இந்த பட்டியல் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டில் ரூ.29,999 என்ற விலையில் கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் தற்போது இது ஒத்துப்போகிறது.

மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி

மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி

விவோ வி20 ப்ரோ 5ஜி தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு தாய்லாந்தில் நிர்ணயிக்கப்பட்ட இந்திய விலை மதிப்பு ரூ.35,132 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

10 சதவீதம் கேஷ்பேக்

10 சதவீதம் கேஷ்பேக்

விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த பின்பு, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட வங்கி கார்டுகளை கொண்டு முன்பதிவு செய்பவர்களுக்கு 10 சதவீதம் கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்!விண்வெளியில் நேருக்கு நேர் வந்த இஸ்ரோ- ரஷ்ய செயற்கைகோள்கள்- மோதும் தூரத்தில் வந்ததால் பதற்றம்!

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

ஏற்கனவே விவோ வி 20, விவோ வி 20 எஸ்இ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளன. விவோ 20 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் 11 இல் இயங்குகிறது.

6.44 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

6.44 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

இது 6.44 அங்குல முழு எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே ஆதரவுடன் உள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

64 மெகாபிக்சல் முதன்மை கேமரா

விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் வைடு லென்ஸ் + 2 மெகா பிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் உள்ளிட்ட மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் முன்பக்கத்தில் 44 எம்பி முதன்மை சென்சார் + 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் என இரட்டை செல்பி கேமரா வசதி உள்ளது.

4,000 mAh பேட்டரி

4,000 mAh பேட்டரி

விவோ வி 20 ப்ரோ 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மமார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த சாதனம் 4,000 mAh பேட்டரியுடன் வருகிறது, இது 33W ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

விவோ வி 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 64 எம்பி கேமரா இருப்பதால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய முடியம். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த சாதனத்தின் அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாகவே உள்ளது. ஆனால் 4000 ஏம்ஏஎச் பேட்டரிக்கு பதிலாக 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு இந்த சாதனம் வெளிவந்திருந்தால் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைந்திருக்கும்.

Best Mobiles in India

English summary
Vivo V20 Pro Smartphone Going to Launch on December 2: Price Leaked

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X