இரட்டை செல்பி கேமராவோடு விவோ வி 20 ப்ரோ: விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

|

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20 ஸ்மார்ட்போன்கள் தாய்லாந்தில் நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன. விவோ வி 20 ப்ரோவை இரட்டை-செல்பி கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி எஸ்ஓசி செயலி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது.

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20

விவோ வி 20 ப்ரோ மற்றும் விவோ வி 20 ஸ்மார்ட்போன்கள் தாய்லாந்தில் நடந்த நிகழ்வில் வெளியிடப்பட்டன. புதிய விவோ வி-சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்கள் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகின்றன. அதோடு விவோ எக்ஸ் 50ஐ போன்று ஏஜி மேட் கண்ணாடி பாதுகாப்பு அம்சம் உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC

விவோ வி 20 ப்ரோ முன்பக்கத்தில் இரட்டை செல்பி கேமரா அமைப்புடன் வருகிறது. ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. விவோ வி 20 ஒற்றை செல்ஃபி கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி எஸ்ஓசி செயலியுடன் வருகிறது. விவோ வி 20 ப்ரோ 5 ஜி ஐ ஆதரவு கொண்டவையாகும்.

விவோ வி 20 ப்ரோ, விவோ வி 20: விலை

விவோ வி 20 ப்ரோ, விவோ வி 20: விலை

விவோ வி 20 ப்ரோவின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .35,300 ஆக இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் இன்று முதல் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 30 முதல் வாங்குவதற்கு கிடைக்கும். இது மூன்லைட் சொனாட்டா, மிட்நைட் ஜாஸ் உள்ளிட்ட மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. விவோ வி 20 ஸ்மார்ட்போனின் விலை தற்போதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ் மற்றும் சன்செட் மெலடி ஆகிய நிறங்களில் வருகிறது.

விவோ வி 20 ப்ரோ: அம்சங்கள்

விவோ வி 20 ப்ரோ: அம்சங்கள்

விவோ வி 20 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ஃபன்ட் டச் ஓஎஸ் 11 இல் இயங்குகிறது. இது 6.44 அங்குல முழு எச்டி+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே ஆதரவுடன் உள்ளது. அதோடு 8 ஜிபி ரேம் கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

100-க்கும் அதிகமான பெண்களிடம் ஆபாச பேச்சு., கல்லூரி மாணவிகள் டார்கெட்: ஒரே ஒரு சிம்கார்ட் டுவிஸ்ட்!

விவோ வி 20 ப்ரோ: கேமரா

விவோ வி 20 ப்ரோ: கேமரா

விவோ வி 20 ப்ரோ: கேமரா விவோ வி 20 ப்ரோ 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் மோனோக்ரோம் உள்ளிட்ட மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல் முன்பக்கத்தில் 44 எம்பி முதன்மை, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை என இரட்டை செல்பி கேமரா வசதி உள்ளது.

விவோ வி 20 ப்ரோ 128 ஜிபி உள்சேமிப்பு

விவோ வி 20 ப்ரோ 128 ஜிபி உள்சேமிப்பு

விவோ வி 20 ப்ரோ 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். ஸ்மமார்ட்போனில் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்த சாதனம் 4,000 mAh பேட்டரியுடன் வருகிறது, இது 33W ஃபிளாஷ் சார்ஜ் மற்றும் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

விவோ வி 20 அம்சங்கள்

விவோ வி 20 அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன்கள் விவோ வி 20 ஃபன் டச் ஓஎஸ் 11 இல் இயங்குகிறது. ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளடக்கிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் ஒற்றை 44 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது. 4000mAh பேட்டரியோடு 33 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அம்சத்தை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V20 Pro Launched with Dual Selfi Camera and Vivo V20 Announced With Snapdragon 765G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X