விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு: முழு விவரம்.!
விவோ நிறுவனத்தின் அசத்தலான விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவோ வி20 ஸ்மார்ட்போன் ஆனது கடந்த மாதம் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி20
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி20 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.24,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ வி20
மாடலின் முந்தைய விலை ரூ.27,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.25,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மகேஷ் டெலிகாம்
குறிப்பாக இந்த விலைகுறைப்பு அறிவிப்பை முதலில் மும்பையைச் சேர்ந்த சில்லறை விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் தான் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அனைத்து ஆஃப்லைன் கடைகளில் விவோ வி20 ஸ்மார்ட்போனை விலைகுறைப்பில் வாங்க முடியும். குறிப்பாக சன்செட் மெலடி, மிட்நைட் ஜாஸ் மற்றும் மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பங்களில் வருகிறது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி20 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்தது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இப்போது விவோ வி20 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ வி20 டிஸ்பிளே
விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ வி20 சிப்செட் வசதி
விவோ வி20 ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி20 ரேம்
விவோ வி20 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி ஆகிய மூன்று தனித்துவமான நிறங்களில் கிடைக்கும்.

விவோ வி20 கேமராக்கள்
விவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை எடுக்க முடியும்.

4000 எம்ஏஏச் பேட்டரி
இந்த விவோ வி20 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இருப்பதால் பயன்படுத்துவதற்குஅருமையாக இருக்கும்.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதற்குமுன்பு அறிமுகம் செய்யபபட்ட Vivo Y31s ஸ்டாண்டர்டு எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன்
தனித்துவமான சிப்செட் தவிர, புதிய ஸ்மார்ட்போன் இனப்பிரியர் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இது அசல்-எடிஷனில் கிடைக்கும் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே அளவிலும் சிறியது. விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷனின் 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட்டின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.19,100 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் லேக் லைட் ப்ளூ, டைட்டானியம் கிரே மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இருப்பினும், உலக சந்தைகளில் அதன் வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ ஒய் 31 எஸ் ஸ்டாண்டர்ட் எடிஷன் சிறப்பம்சம்
6.51 இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளே
வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச்
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்
6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ்
டூயல் கேமரா அமைப்பு
13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
8 மெகாபிக்சல் செல்பி கேமரா
5 ஜி
4 ஜி எல்டிஇ
வைஃபை
புளூடூத் 5.1
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
யூ.எஸ்.பி டைப்-சி
3.5 ஆடியோ ஜாக்
18W டூயல் எஞ்சின் பாஸ்ட் சார்ஜிங்
5000 எம்ஏஎச் பேட்டரி


Click it and Unblock the Notifications