விவோ வி20 புதிய வண்ண மாறுபாடு அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்!

|

விவோ வி20 மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பம் அக்டோபர் 29 (இன்று) முதல் விவோ இந்தியா வலைதளம், பிளிப்கார்ட் மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பம்

மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பம்

விவோ வி20 மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பம் அக்டோபர் 29 (இன்று) முதல் விவோ இந்தியா வலைதளம், பிளிப்கார்ட் மற்றும் குறிப்பிட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும். விவோ வி20 சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு

விவோ வி20 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாறுபாடு விலை ரூ.24,990 ஆகவும், 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.27,990 ஆகவும் உள்ளது. மூன்லைட் சொனாட்டா வண்ண விருப்பங்களோடு சன்செட் மெலடி மற்றும் மிட்நைட் ஜாஸ் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கிறது.

விவோ வி20-க்கு பல்வேறு சலுகைகள்

விவோ வி20-க்கு பல்வேறு சலுகைகள்

விவோ வி20 ஸ்மார்ட்போனுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் எளிதான இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. பிஎஃப்எல் ஆர்பிஎல் சூப்பர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பஜாஜ் ஃபின்செர்வ் டவுன் பேமென்ட் திட்டத்தில் 20% உடனடி கேஷ்பேக் கிடைக்கும். இஎம்ஐ பரிவர்த்தனைகளில் ஐசிஐசிஐ வங்கியுடன் பிளாட் 10% கேஷ்பேக் கிடைக்கிறது.

2020 அடுத்த அற்புத நிகழ்வு: அக்டோபர் 31 வானில் தெரியும் ப்ளூ மூன்- மிஸ் பண்ணாதிங்க!

6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.44 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் இதில் இருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி

ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி

விவோ வி20 ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயல்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64 எம்பி பிரைமரி சென்சார்

64 எம்பி பிரைமரி சென்சார்

விவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை எடுக்க முடியும்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V20 Moonlight Sonata Colour Variant Available From Today

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X