Home
Mobile

இந்தியாவில் விவோ வி20 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் அம்சங்கள்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ வி20 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 44எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் சிறந்த மென்பொருள் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 20-ம் தேதி

இந்த புதிய விவோ சாதனம் பிளிப்கார்ட் மற்றும் விவோ.காம் போன்ற தளங்களில் முன்பதிவு செய்ய கிடைக்கும். மேலும் வரும்அக்டோபர் 20-ம் தேதி விவோ வி20 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த விவோ வி20 சாதனத்தின்விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஸ்மார்ட்போன்

விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ண்ட்ராய்டு 11

விவோ வி20 ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு

விவோ வி20 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி ஆகிய மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

னவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை

விவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை எடுக்க முடியும்.

போன் ரூ.27,990-விலையில்

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ வி20 ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலையில் விற்பனைக்கு வரும். அதேபோல 256ஜிபி மெமரி கொண்ட் விவோ வி20 ஸ்மார்ட்போன் ரூ.27,990-விலையில் விற்பனைக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V20 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X