என்னது, இது தான் விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போனின் கீக்பெஞ்ச் ஸ்கோரா?

|

விவோ நிறுவனத்தின் புதிய விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போன் கீக்பெஞ் பட்டியலில் காணப்பட்டதாக டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவல் ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை வெளிப்படுத்துகிறது.இந்த புதிய ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் விருப்பத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போன்

புதிய விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போன்

புதிய விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கக்கூடும் என்றும், SM6150 என்ற மிட்ரேஞ் பிராசஸர் ஆல் இயக்கப்படலாம் என்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. இது அடிப்படையில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்டாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமுள்ளது. விவோ வி 20 இன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிடுவது குறித்து விவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மாடல் எண் V2040

மாடல் எண் V2040

ஆனால் ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று முந்தைய தகவல்கள் தெரிவிக்கின்றது. கீக்பெஞ்ச் தகவலின் படி, புதிய விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போன் பட்டியலில் மாடல் எண் V2040 என்ற குறியீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிச்சயம் புதிய விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போனாக தான் இருக்குமென்று நம்பப்படுவதாக டிப்ஸ்டர் தகவல் வெளியாகியுள்ளது.

மிஸ் பண்ணாதிங்க: 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் நிகழும் அதிசியம்: அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!மிஸ் பண்ணாதிங்க: 397 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வானில் நிகழும் அதிசியம்: அடுத்தது 2080 ஆம் ஆண்டுதான்!

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 SoC

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 SoC

புதிய விவோ வி 20 (2021) ஸ்மார்ட்போன்,8 ஜிபி ரேம் உடன் கீக்பெஞ்ச் காணப்பட்டுள்ளது, குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 SoC மற்றும் அண்ட்ராய்டு 11 அடிப்படையில் உள்ள ஸ்மார்ட்போன் சிங்கிள் கோர் டெஸ்டிங்கில் 553 புள்ளிகளும் மற்றும் மல்டி கோர் சோதனைகளில் 1,765 புள்ளிகளையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. கீக்பெஞ்ச் பட்டியல் வி 20 (2021) இன் வேறு எந்த விவரக்குறிப்புகளும் வெளிப்படுத்தப்படவில்லை.

விரைவில் இந்தியாவில் அறிமுகம்

விரைவில் இந்தியாவில் அறிமுகம்

குறிப்பிட்டுள்ளபடி, விவோ வி 20 (2021) பல டிப்ஸ்டர்களால் அதிகளவில் இணையதளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தோனேசியாவின் டெலிகாம் வலைத்தளம் மாடல் எண் V2040 மற்றும் விவோ வி 20 (2021) குறித்த தகவலை இந்திய பணியக தரநிலைகள் (BIS) ஆகிய இடங்களில் கண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் உள்நாட்டில் அறிமுகமாகும் என்று நம்பப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V20 (2021) Spotted on Geekbench With Qualcomm Snapdragon 675 SoC : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X