Home
Mobile

சைலன்ட்டாக விற்பனைக்கு வந்த Vivo V20 2021 ஸ்மார்ட்போன்: என்ன விலை தெரியுமா?

கடந்த அக்டோபரில் அறிமுகமான விவோ வி20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக விவோ வி20 2021 அறிமுகமாகும் என தகவல்கள் மட்டுமே கசிந்த நிலையில் தற்போது நிறுவனம் விவோ வி20 2021 ஸ்மார்ட்போனை சைலண்ட்டாக அறிமுகம் செய்ததோடு அமேசான் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.

விவோ வி20 2021 ஸ்மார்ட்போன்

விவோ வி20 2021 ஸ்மார்ட்போன்

விவோ வி20 2021 ஸ்மார்ட்போன் முந்தைய விவோ வி20 போல் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இதில் புதிய சிஸ்டம் ஆன் சிப்பை நிறுவனம் பொருத்தியுள்ளது. விவோ வி20 2021 ஸ்மார்ட்போன் இரண்டு தனித்துவ வண்ண விருப்பங்களோடு அமேசானில் லிமிடெட் டைம் டீல் வாய்ப்பின் கீழ் விற்பனைக்கு கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு

விவோ வி20 2021 ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விருப்பத்தோடு ரூ.24,990 என்ற விலையில் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் ஜாஸ், சன்செட் மெலடி என்ற இரண்டு வண்ண விருப்பங்களில் அமேசானில் கிடைக்கிறது.

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

அமேசான் வெளியிட்டுள்ள தகவலின்படி விவோ வி20 2021 ஸ்மார்ட்போன் விவோ வி20 போன்றே இரட்டை சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 ஓஸ் உடன் ஃபன்டச் ஓஸ் 11 உடன் இயங்குகிறது. அதோடு இதில் 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி எஸ்ஓசி மூலம் இயங்குகிறது.

அமேசானில் மட்டும் விற்பனை

அமேசானில் மட்டும் விற்பனை

இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி என்றே ஒரே வேரியண்டில் கிடைக்கிறது. இது தொடர்ச்சியாக ஒரே வேரியண்டில் மட்டும் கிடைக்குமா அமேசானில் மட்டும் பிரத்யேகமாக கிடைக்குமா போன்ற தகவல்கள் முழுவதுமாக தெரியவில்லை.

 64 மெகாபிக்சல் பிரதான கேமரா

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

இதில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா என மூன்று கேமராக்கள் உள்ளது. இதில் 44 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo V20 2021 Smartphone Sale Start in India Via Amazon: Price, Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X