விவோ வி20 (2021) ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழு விவரம்.!
அண்மையில் வெளிவந்த gadgetsnow.com தகவலின்படி, விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விவோ வி20 (2021) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.24,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.22,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த சாதனத்தை விவோ வலைத்தளத்தில் வாங்க முடியும் என்று கூறப்படுகிறது.

6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
விவோ வி20 (2021) ஸ்மார்ட்போனில் தரமான சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்படி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி20 (2021) ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி ஆகிய மூன்றுதனித்துவமான நிறங்களில் கிடைக்கும்.

64எம்பி பிரைமரி சென்சார்
விவோ வி20 (2021) ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 44எம்பி செல்பீ கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே மிகத் துல்லியமாக செல்பீ படங்களை எடுக்க முடியும்.

4000 எம்ஏஎச் பேட்டரி
விவோ வி20 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட்பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ / டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications