விவோ வி20 (2021) விரைவில் இந்தியாவில் அறிமுகம்: இதோ முழு விவரங்கள்!
விவோ வி 20 (2021) விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது விவோ வி20 (2021) இந்தோனேசியா டெலிகாம் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் அறிமுகமான விவோ வி20 ஸ்மார்ட்போன்
விவோ வி20 ஸ்மார்ட்போன் இந்தாண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து விவோ நிறுவனம் விரைவில் விவோ வி20 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விவோ வி20 (2021) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேசியா இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன்
இதுகுறித்த மைஸ்மார்ட் பிரைஸ் அறிக்கையின்படி, விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன் இந்தோனேசியா டெலிகாம் இணையதளத்தில் மாடல் எண் வி 2040 உடன் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாகும் என பிஐஎஸ் தெரிவிக்கிறது.

சிறப்பம்சங்கள் வெளியாகவில்லை
விவோ வி20 (2021) ஸ்மார்ட்போன் இரண்டு இணையதள பட்டியல்களில் காணப்பட்டாலும் இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்கள் வெளியாகவில்லை. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவோ வி20 ஸ்மார்ட்போன் அம்சங்கள்
முன்னதாக அக்டோபர் மாதம் வெளியான விவோ வி20 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பெரிய டிஸ்பிளே என்பதால் திரைப்படம், வீடியோ கேம் உள்ளிட்ட வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். பின்பு ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி
ஆண்ட்ராய்டு 11 இயக்கத்தை ஆதரவாக கொண்டு 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது. விவோ வி20 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது.

64 எம்பி பிரைமரி கேமரா
விவோ வி20 ஸ்மார்ட்போன் மிட்நைட் ஜாஸ், மூன்லைட் சொனாட்டா மற்றும் சன்செட் மெலடி ஆகிய மூன்று தனித்துவமான நிறங்களில் கிடைக்கிறது. விவோ வி20 ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.
File Images


Click it and Unblock the Notifications