48எம்பி பிரைமரி கேமராவுடன் களமிறங்கும் விவோ வி19 ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனத்தின் விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் 10-ம் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி பிரைமரி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.5-இன்ச் AMOLED எச்டி டிஸ்பிளே
வெளிவந்த தகவலின் அடிப்படையில் விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் AMOLED எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 x 2340பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.

விவோ வி19 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

128ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் விவோ வி19 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி ஏஐ கேமராவுடன் மொத்தம் நான்கு கேமரா இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி
இந்த விவோ வி19 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் எனவும், பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்
விவோ வி19 சாதனத்தில் புளூடூத்இ 4ஜி வோல்ட்இ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








