Vivo இந்த மாடல் ஸ்மார்ட்போன் வச்சுருக்கீங்களா: இதோ உங்களுக்கு ஒரு நற்செய்தி!
விவோ வி19 ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்தாண்டு ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் புதுப்பிப்புடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்த பியூனிகாவெப்பின் கருத்துப்படி, ஆண்ட்ராய்டு 11 புதிப்பிப்பு விவோ ரெவ் 6.71.16 உடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 3.7ஜிபி ஆகும். இந்த அப்டேட் ஜனவரி 2021 பாதுகாப்பு இணைப்பையும் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிப்பிப்பு கட்டமைப்பு தற்போது பீட்டா கட்டத்தில் இருக்கிறது. எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வரலாறு, பிராயரிட்டி சேட் செயல்பாடு, சாட் பபிள்ஸ், மேம்படுத்தப்பட்ட மீடியா கட்டுப்பாடுகள் ஆகியவைகளுடன் ஆண்ட்ராய்டு 11 அம்சங்களை கொண்டு வருகிறது.
பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், செட்டிங்க்ஸ் தேர்வுக்குள் சென்று சாஃப்ட்வேர் அப்டேட் என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் மற்றும் இன்ஸ்டால் தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
விவோ வி19 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.44 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்கள் ஆகியவை உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை செல்பி கேமரா இருக்கிறது. 32 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமராக்கள் இருக்கிறது.


Click it and Unblock the Notifications