Home
Mobile

விரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!

வெளிவந்த தகவலின் அடிப்படையில் விவோ நிறுவனத்தின் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் முன்பதிவு இந்த மாதம் இறுதியில் துவங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக விவோ வி19 மற்றும் வி1ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
என்றுதான் கூறவேண்டும். மேலும் இதற்கு முன்பு வந்த விவோ வி17 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!

இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


விவோ வி17 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 612 ஜி.பீ.யூ வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஃபன்டூச் ஓஎஸ் 9.2 ஆதரவுடன் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
விரைவில் களமிறங்கும் விவோ வி19 மற்றும் வி19ப்ரோ ஸ்மார்ட்போன்கள்.!

விவோ வி17 சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

விவோ வி17 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல்-பேண்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Vivo V19 Pro to Launch in India on March 3, Pre-Bookings to Start Soon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X