மிரண்டுபோன கேமரா மார்க்கெட்.. 80W சார்ஜிங்.. சோனி கேமரா.. OLED டிஸ்பிளே.. புதிய Vivo போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எஸ்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது விவோ எஸ்19 (Vivo V19) மற்றும் விவோ எஸ்19 ப்ரோ (Vivo V19 Pro) ஸ்மார்ட்போன்கள் தான் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போன்களின் அறிமுக தேதி மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ வி19 ப்ரோ அம்சங்கள் (Vivo V19 Pro specifications): 6.78-இன்ச் கர்வ்ட் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ எஸ்19 சீரிஸ் ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷன், 2800 x 1260 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.
சக்திவாய்ந்த டைனம்சிட்டி 9200 பிளஸ் (Dimensity 9200+ SoC) சிப்செட் வசதியைக் கொண்டு இந்த புதிய விவோ வி19 ப்ரோ போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு வழங்கப்படும்.

OIS ஆதரவு 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் (Sony IMX921 sensor) + 50எம்பி Sony டெலிபோட்டோ கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ வி19 ப்ரோ ஸ்மார்ட்போன். அதேபோல் இதன் ரியர் கேமராக்கள் 50× டிஜிட்டல் ஜூம் ஆதரவைக் (50× digital zoom support) கொண்டுள்ளன. எனவே இதன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த புதிய விவோ போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி ஆடியோ உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல்
16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வசதியுடன் விற்பனைக்கு வரும் இந்த விவோ வி19 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

விவோ வி19 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் (5000mAh) பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி19 ப்ரோ ஸ்மார்ட்போன். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (80W fast charging) வசதியும் உள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த விவோ போன் வெளியாகும்.
விவோ எஸ்19 அம்சங்கள் (Vivo V19 specifications): ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 (Snapdragon 7 Gen 3)சிப்செட் உடன் விவோ எஸ்19 போன் அறிமுகமாகும். பின்பு இந்த போனில் 16ஜிபி ரேம், 6000எம்ஏஎச் பேட்டரி, 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது அறிமுகம்? விவோ எஸ்19 மற்றும் விவோ எஸ்19 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முதலில் சீனாவில் தான் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு தான் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும். குறிப்பாக சீனாவில் வரும் 30-ம் தேதி இந்த விவோ எஸ்19 சீரிஸ் (Vivo S19 series) ஸ்மாரட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








