அதிரடி விலைக்குறைப்பு: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ வி19 இப்போ இவ்வளவுதான்!

|

8 ஜிபி ரேம், 32 எம்பி செல்பி கேமரா என பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ வி 19 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி19 விலை குறைப்பு

விவோ வி19 விலை குறைப்பு

இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி19 விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 விலைக்குறைப்பும், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போனுக்கு ரூ.4000 வரை விலைக்குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வேரியண்ட்களில் விற்பனை

இரண்டு வேரியண்ட்களில் விற்பனை

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி 19 விலை ரூ.24,990 என்ற விலையில் விற்கப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.27,990 என விற்கப்பட்டது. அதேபோல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,990 என்ற விலையில் விற்கப்படுகிறது. முன்னதாக இது ரூ.31,990 என்ற விலையில் விற்கப்பட்டது.

விவோ 19 புதுப்பிக்கப்பட்ட விலை

விவோ 19 புதுப்பிக்கப்பட்ட விலை

விவோ 19 இந்த புதுப்பிக்கப்பட்ட விலையானது நிறுவனத்தின் இணையதளம், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் கிடைக்கிறது. ஆஃப்லைன் கடைகளிலும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இது எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்ட்கள் மூலம் வாங்கும்போது 10 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது.

சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!சரியான நேரத்தில் நல்ல முடிவை எடுத்த சுந்தர் பிச்சை.! 2021 ஜூன் வரை நீட்டிப்பு.!

6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே

6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே

விவோ வி19 ஸ்மார்ட்போன் மாடல் 6.44-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் விற்கப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 675 சிப்செட்

இந்த விவோ வி19 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் உடன் அட்ரினோ 612ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் கொண்டுள்ளது.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

விவோ வி19 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி போர்ட்ரெய்ட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

விவோ வி19 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்கது, மேலும் 18வாட் டூயல் எஞ்ஜின் பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி டைப்-சி போர்ட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

Best Mobiles in India

English summary
Vivo v19 getting Pricecut in india Price and Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X