சலுகையுடன் விற்பனைக்கு வரும் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
விவோ நிறுவனம் தனது வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை குறிப்பிட்ட சலுகையுடன் விற்பனைக்கு கொண்டுவருகிறது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அம்சம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது என்றுதான்
கூறவேண்டும்.

10சதிவிகிதம் கேஷ்பேக்
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட விவோ வி17ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது,பின்பு இந்த சாதனம் பிளிப்கார்ட், பேடிஎம் மால், அமேசான் போன்ற தளங்களில் கிடைக்கும். குறிப்பாக தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதிவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். மேலும்
வோடபோன் நிறுவனம் சார்பில் விவோ வி17ப்ரோ சாதனத்திற்கு டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இப்போது இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.44-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080×2440 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஷ் 6பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி17 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ்+13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி சூப்பர்வைடு
ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் முன்புறம் 32எம்பி + 8எம்பி பாப்-அப் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ வி17 ப்ரோ சாதனத்தில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications