செப்டம்பர் 20: விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது விவோ வி17 ப்ரோ மாடலை செப்டம்பர் 20-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் இப்போது ஆன்லைனில் விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய குறிப்புகள் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்.

விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.44-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080×2440 பிக்சல் திர்மானம் மற்றும் 21:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பாப்-அப் செல்பீ கேமரா
விவோ வி17 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் உடன் சேர்த்து மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் முன்புறம் 32எம்பி பாப்-அப் செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ வி17 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

விவோ வி17 ப்ரோ சாதனத்தில் 4100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்


Click it and Unblock the Notifications