அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் புதிய விவோ எஸ்1 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிலிப்பைன் நாட்டில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறப்பிடத்தக்கது. தற்சமயம் ரஷ்யாவில் விவோ எஸ்1 ப்ரோ மாடல் விவோ வி17 என்ற பெயிரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.38-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும்.

அசத்தலான விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் துல்லியமாக புகைப்படம் எடுக்கும் வகையில் பல்வேறு 3டி வசதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது.விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி செகன்டரி சென்சார்+2 எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஷ் போன்ற
அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விவோ எஸ்1 ப்ரோ சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், புளூடூத் 5.0, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Vivo V17 launched in Russia, to be sold as Vivo Y9s in China : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X