இந்தியா: 32எம்பி செல்பீ கேமரா, 4500எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வி17 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ நிறுவனம் தனது விவோ வி17 ஸமார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக குவாட் கேமரா அமைப்பு,4500எம்ஏஎச் பேட்டரி ஆதரவுகளுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது
விவோ வி17 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி
இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்

அருமையான சிப்செட் வசதி
விவோ வி17 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 612 ஜி.பீ.யூ வசதியும்உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஃபன்டூச் ஓஎஸ் 9.2 ஆதரவுடன் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

அட்டகாசமான கேமரா
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பிமேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு வசதி
விவோ வி17 சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த சாதனம்
வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இனைப்பு ஆதரவுகள்
விவோ வி17 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல்-பேண்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சிபோர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை மற்றும் விற்பனை
விவோ வி17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990-ஆக உள்ளது. மேலும் வரும் டிசம்பர் 17-ம் தேதி முதல் ஆஃப்லைன் மற்றும்ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது இந்த சாதனம்.


Click it and Unblock the Notifications








