Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் மிரட்டலான விவோ வி17: விலை மற்றும் முழுவிபரங்கள்.!

விவோ நிறுவனத்தின் விவோ17 ஸ்மார்ட்போன் மாடல் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்டது, இந்நிலையில் இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆனது இன்று அமேசான் மற்றும பிளிப்கார்ட், விவோ இந்தியா இ-ஸ்டோர் போன்ற ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது.

 5சதவிகிதம் கேஷ்பேக்

5சதவிகிதம் கேஷ்பேக்

குறிப்பான தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 5சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜியோ நிறுவனம் சார்பில் ஒரு பெரிய சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு விவோ வி17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990-ஆக உள்ளது.

சூப்பர் AMOLED டிஸ்பிளே

சூப்பர் AMOLED டிஸ்பிளே

இந்த விவோ வி17 ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆண்ட்ராய்டு 9பை ஃபன்டூச் ஓஎஸ் 9.2

ஆண்ட்ராய்டு 9பை ஃபன்டூச் ஓஎஸ் 9.2

விவோ வி17 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் உடன் அட்ரினோ 612 ஜி.பீ.யூ வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை ஃபன்டூச் ஓஎஸ் 9.2 ஆதரவுடன் இயங்குவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 48எம்பி பிரைமரி சென்சார்

48எம்பி பிரைமரி சென்சார்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

விவோ வி17 சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

விவோ வி17 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், டூயல்-பேண்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo V17 goes on sale in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X