32எம்பி பாப்-அப் கேமராவுடன் தெறிக்கவிடும் விவோ.!
புதிய வி15 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எப்ஹெச்டி + இன் ஸ்கிரீன் எல்சிடி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட், செல்பி கேமரா 32எம்பியும் இடம் பெற்றுள்ள
விவோ நிறுவனம் வி 15 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இதில் 32எம்பி பாப் அப் கேமராவும் இடம் பெற்றுள்ளது. இதில் ஏராளமான வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

6.53 இன்ச் திரை:
புதிய வி15 ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் எப்ஹெச்டி + இன் ஸ்கிரீன் எல்சிடி கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட், செல்பி கேமரா 32எம்பியும் இடம் பெற்றுள்ளது.

12எம்பி டூயல் பிக்சல் கேமரா:
பின்புறம் 12எம்பி டூயல் பிக்சல் கேமரா, 5எம்பி டெப்த் சென்சார், 8 எம்பி 120டிகிரி வைடு ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

4000 எம்ஏஹெச் பேட்டரி:
இதில் பின்புறம் கைரேகை சென்சார், விவோ 15 மாடலில் 4000 எம்ஏஹெச் பேட்டரி, டூயல் என்ஜின் பாஸ்ட் சார்ஜிங் வசதி, மைக்ரோ யுஎஸ்பி வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை:
ராயல் புளு புரோசன் பிளாக், கிளாமர் ரெட் உள்ளிட்ட நிறங்கிளல் கிடைக்கின்றது. இந்தியாவில் விலை ரூ.23,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1ம் முதல் விற்பனை:
விவோ இந்தியா ஸ்டோர், அமேசான், ப்ளிப்காரட் பேடிஎம் மால் மற்றும் இதர ஆன்லைன்களில் வலைதளங்களில் முன்பதிவு செய்யப்படுகின்றது. ஏப்ரல் 1ம் தேதி முதல் விற்பனைக்கு வருகின்றது.

5% கேஷ்பேக் சலுகை:
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது, 5 % கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் வாங்கும் 6 மாதங்களுக்குள் ஸ்கீரீனை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம்.

ஜியோ சலுகை:
12 மாதங்களுக்கு வட்டியில்லை: மேலும் 12 மாதங்களுக்கு வட்டியில்லாத மாத தவணை முறையை வசதியை பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேஞ் செய்யும் போது, ரூ2000 வரை தள்ளுபடியும் ஜீயோ பயனர்களுக்கு ரூ.10,000 மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications