உலகின் முதல் 32-இன்ச் செல்பீ கேமரா கொண்ட விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாப்-அப் செல்பீ கேமரா இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விவோ வி15 ப்ரோ பொதுவாக நீலம் மற்றும் சிவப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெசல்ஸ் வடிவமைப்பு
விவோ வி15 ப்ரோ மாடல் கொண்டுள்ளதால் அதிக கவனத்தை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்
மேலும் பின்புறம் மூன்று கேமரா அமைப்பு மற்றும் எளிதில் உடையத வண்ணம் சிறந்த மற்றம் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் இந்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக தான் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர்
இடம்பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

கேமரா:
விவோ வி15 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி (quad pixel sensor) + 8எம்பி (super wide-angle lens) + 5எம்பி(depth sensor) கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று இதன் செல்பீ கேமரா 32எம்பி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி-விலை:
இந்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்ரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11,
ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஸ்பி போர்ட்,
3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்
அடக்கம்.
6ஜிபி ரேம் கொண்ட இந்த வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications