விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு சலுகை!
விவோ நிறுவனத்தின் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அம்சம் அனைவரையும் கவரும்
வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

விலைகுறைப்பு
6ஜிபி ரேம் கொண்ட விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.26,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.23,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் கொண்ட விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.26,990-விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

விவோ வி15 ப்ரோ டிஸ்பிளே:
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.39-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2340 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி15 ப்ரோ சிப்செட்:
விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ வி15 ப்ரோ கேமரா:
விவோ வி15 ப்ரோ சாதனத்தின் பின்புறம் 48எம்பி (quad pixel sensor) + 8எம்பி (super wide-angle lens) + 5எம்பி(depth sensor) கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று இதன் செல்பீ கேமரா 32எம்பி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

விவோ வி15 ப்ரோ பேட்டரி :
இந்த விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போனில் 3700எம்ஏஎச் பேட்ரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








