விவோ வி15 புதிய மாடல் எப்படி? இதோ ஒரு பார்வை.!

|

இந்திய மொபைல் மார்க்கெட்டி வீவோ நிறுவனம் தற்போது வீவோ வி15 என்ற புதிய மாடலை ரூ.28990 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் மூன்று லென்ஸ் கேமிரா, 32 எம்பி பாப் அப் செல்பி கேமிரா, மற்றும் நவீன ஸ்க்ரீன், பிங்கர் பிரிண்ட் ஆகியவை சிறப்பு அம்சங்கள் ஆகும்.

விவோ வி15 புதிய மாடல் எப்படி? இதோ ஒரு பார்வை.!


வீவோ வி15 உள்ள மற்ற சிறப்பு அம்சங்கள் அதன் புதிய டெக்னாலஜி, புதிய ஸ்னாப்டிராகன் 675 சிபியூ ஆகியவை ஆகும். இதன் காரணமாக பிளாக்சிப் சிப்செட், டைப் சி போர்ட் ஆகியவை தேவையில்லை

இந்த மாடல் மொபைல் பயன்படுத்துபவர்கள் 32 எம்பி பாப் அப் செல்பி கேமிராவை பயன்படுத்தும் வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள் என்பதும் ஒரு கூடுதல் சிறப்பு

செல்பி உள்பட கேமிராவின் சிறப்பு அம்சங்கள்

செல்பி உள்பட கேமிராவின் சிறப்பு அம்சங்கள்

இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் வலைத்தளங்களில் செல்பியை பதிவு செய்பவர்களுக்கு இந்த மாடல் ஒரு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள 32 எம்பி செல்பி கேமிரா பல அற்புதமான செல்பி ஷாட்களை எடுக்கும் திறன் கொண்டவை. இதில் உள்ள பாப்ஸ் அவுட் வெகு எளிதாக செல்பி எடுக்க உதவுகிறது. இந்நிறுவனம் இதில் பொருத்தியுள்ள கேமிரா சென்சார் காரணமாக உயர் தர செல்பி புகைப்படங்கள் அமைய காரணமாகியுள்ளது. மேலும் இதில் உள்ள பல்வேறு வகையான மோட்கள், பில்டர்ஸ்கள் மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக ஏஐ மோட் மிக சிறப்பானது ஆகும். மேலும் இதில் உள்ள வசதிகளை கொண்டு வண்ணங்களை மாற்றும், வடிவத்தை மாற்றுவது மற்றும் முக அமைப்பில் சில மாறுதல்கள் செய்வது, கண், இமை, முன் நெற்றி, மூக்கு, உதடு உள்பட உறுப்புகளை அழகாக மாற்றலாம். இதனால் செல்பி எடுத்தவர்கள் இது நம்முடைய புகைப்படம் தானா என ஆச்சரியப்படும் அளவுக்கு இருக்கும்

பின்கேமிராவில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

பின்கேமிராவில் உள்ள சிறப்பு அம்சங்கள்:

இந்த வீவோ வீ15 மாடலில் மூன்று லென்ஸ்கள் கொண்ட பின் கேமிரா உள்ளது என்பதை பார்த்தோம். இவை 8 எம்பி வைட் ஆங்கிள், 5 எம்பி ஸ்டாண்டர்ட் லென்ஸ் மற்றும் 48 எம்பி குவாட் பிக்சல் சென்சார் ஆகியவை அடங்கியது. இதனால் இதில் கிடைக்கும் ரிசல்ட் பிரமாதமானது. உண்மையான கண்களில் கலர் இதில் கிடைப்பது சிறப்பு அம்சம். கேமிரா சாப்ட்வேர் மிக உயர் தரத்துடன் அமைந்துள்ளதால் இதில் இருந்து கிடைகும் ஷாட்கள் வெளிச்சம் குறைவானதாக இருந்தாலும் நன்றாக இருக்கும். நைட் மோட் அம்சமும் இதில் உண்டு. மேலும் 4K வீடியோ ரிக்கார்டிங், ஹெச்.டி.ஆர், புரோ மோட், மற்றும் ஏஐ ஆகியவையும் இந்த பின் கேமிராவில் உள்ளது

டிஸ்ப்ளேவின் சிறப்பு அம்சங்கள்

டிஸ்ப்ளேவின் சிறப்பு அம்சங்கள்

இந்த வீவோ வீ15 மாடலில் பெரிய மற்றும் வைப்ரண்ட் அமோல்ட் டிஸ்ப்ளே உள்ளதால் பயன்படுத்துபவர்களுக்கு ஆச்சரியமான அனுபவங்கள் கிடைக்கும். 6.39 இன்ச் டிஸ்ப்லேவில் வைப்ரண்ட் வசதி கொண்ட இதில், மெல்லிய பெஸல் இருப்பதால் வீடியோ கேம் விளையாடும்போது சிறப்பானதாக இருக்கும். அதிக வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு இந்த மாடல் ஒரு பொருத்தமான மாடல் ஆகும்

டிசைன்:

டிசைன்:

வீவோ வீ15 மாடலில் லுக் மிக அழகானது. இதில் உள்ள பட்டன்கள் உபயோகிப்பாளர்களுக்கு மிகவும் வசதியாகவும் எளிதானதாகவும் இருக்கும். இதில் உள்ள கிரேடியண்ட் பேட்டர்ன் வசதி இதில் உள்ள சிறப்புகளில் ஒன்றாகும். எனவேதான் இந்த மாடல் மற்ற மாடல்களில் இருந்து தனித்தன்மையுடன் விளங்குகிறது

மேலும் என்னென்ன இருக்குது

மேலும் என்னென்ன இருக்குது

2019ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள சிறப்பான போன்களில் ஒன்றான இந்த வீவோ வீ15 மாடலில் மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியும் உண்டு. இதனால் ஸ்டோரேஜ் அதிகப்படுத்தி கொள்ளலாம். மேலும் இதில் 3.5 மிமீ ஹெட்போன் ஜேக் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

என்னென்ன சாப்ட்வேர் உள்ளது

என்னென்ன சாப்ட்வேர் உள்ளது

இந்த வீவோ வீ15 மாடலில் ஃபன்ச் டச் ஓஎஸ் உள்ளது என்பதால் இதில் சில பயனுள்ள சாப்ட்வேர்கள் உள்ளன. கேம் கிளப், டி.என்.டி மோட், மோட்டார் பைக் மோட், ஆகியவை இருப்பதால் பல பயன்கள் உள்ளது. வீடியோ காலின்போது ஃபேஸ் அழகு சாப்ட்வேர், கிளென் அப்ளிகேசன்கள், மிர்ரர் வசதி என ஏராளமான சாப்ட்வேர்கள் இதில் உள்ளது

யூஎஸ்பி வசதி:

யூஎஸ்பி வசதி:

இந்த வீவோ வீ15 மாடலின் விலை சுமார் 30 ஆயிரம் என்ற விலையில் இருந்தாலும் அதைவிட மதிப்பு மிகுந்த அட்வான்ஸ் டெக்னாலஜி அம்சங்கள் உள்ளது டைப் சி போர்ட்டுக்கு பதில் மைக்ரோ யூஎஸ்பி 2.0 இதில் உள்ளது. எனவே மிக வேகமாக சார்ஜ் செய்யப்படும். இதற்கு இதில் உள்ள டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜிங் உதவுகிறது. 15 நிமிடத்தில் 25% சார்ஜ் ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

ஃபன் டச் ஓஎஸ்:

ஃபன் டச் ஓஎஸ்:

இந்த மாடலில் விவோ ஃபண்டச் ஓஎஸ் இருப்பதல் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு சில சங்கடங்கள் ஏற்படலாம். ஆனால் எனவே ஆண்ட்ராய்டு பிரியர்கள் விவோவின் இந்த மாடலை ஆண்ட்ராய்டாக மாற்றி கொள்ளவும் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது

பிங்கர் பிரிண்ட்

பிங்கர் பிரிண்ட்

மிக நவீன பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இதில் இருப்பதால் பாதுகாப்பு குறித்த பயமில்லை. பயனாளிகள் போனை அன்லாக் செய்வதும் மிக எளிது. பல போன்களில் பிங்கர் பிரிண்ட் சரியாக வேலை செய்யாமல் தொல்லை கொடுக்கும். ஆனால் இதில் அந்த பிரச்சனை இருக்காது. மிக அருமையாக வேலை செய்யும். விரல் ரேகையை கச்சிதமாக மெமரியாக வைத்து கொள்ளும்

எனவே இந்த புதிய வீவோ வீ15 மாட நிச்சயமாக பயனாளிக்கு ஒரு பயனுள்ள மொபைலாக இருக்கும். டிரிபிள் லென்ஸ், செல்பி கேமிரா, எக்ஸ் பேக்டர்ஸ், மல்டிமீடியா வியூ, அமோல்ட் பேனல், மைக்ரோ யூஎஸ்பி 2.0, வேகமாக சார்ஜ் ஆகும் தன்மை , ஸ்னாப்டிராகன் 675 சிபியூ, புதிய குவால்கோம் சிப்செட் ஆகியவை போனின் உரிமையாளர்களுக்கு பெருமையை தரும்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V15 Pro launched at Rs. 28,990: Good, Bad and the X factor : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X