பட்ஜெட் விலையில் 25 மெகா பிசிக்ஸல் கேமராவுடன் "விவோ வி11 ப்ரோ" அறிமுகம்.!

By Sharath
|
Vivo V11 Pro with in-dispaly Fingerprint Scanner - TAMIL

விவோ நிறுவனம் தனது அடுத்த எதிர்காலத்திற்கு ஏற்ற சூப்பர் பவர் பேக் ஸ்மார்ட்போனாக விவோ வி11 ப்ரோ ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் விவோ நிறுவனம் வெளியிட்ட விவோ நெக்ஸ் மற்றும் விவோ எக்ஸ்21 களை போன்று வெளிவரவிருக்கும் விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் தோடு திரை பிங்கர் பிரிண்ட் தொழிநுட்பம் இருப்பதாக விவோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

இத்துடன் புதிய விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் நான்காவது ஜெனெரேஷன் தோடு திரை பிங்கர் ஸ்கேனர் தொழில்நுட்பத்துடன் கூடிய டூயல் என்ஜின் பாஸ்ட் சார்ஜ்ர் வசதியுடன் களமிறங்கவுள்ளது. விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் சிறந்த குவால்காம் ஸ்னாப் ட்ராகன் 660 ஏஐஇ பிராசஸ்சர் உடன் இயங்குகிறது.

விவோ வி11 ப்ரோ

விவோ வி11 ப்ரோ

இந்த புதிய விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் இன் 2பீடி கேமரா அனைவரையும் கவர்ந்துள்ளது. விவோ வி11 ப்ரோ சிறப்பான டூயல் கேமரா பயன்பாட்டை குறைந்த விலையில் பயனர்களுக்கு கிடைக்கும் விதம் செய்துள்ளதும் விவோ பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த சிறந்த கேமரா சேவை அப்படியே விவோ எக்ஸ்21 மற்றும் விவோ நெக்ஸ் இல் இருக்கும் கேமரா தரத்துடன் ஒப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் 12 மெகா பிக்சல் கேமரா

டூயல் 12 மெகா பிக்சல் கேமரா

விவோ வி11 ப்ரோ அட்டகாசமான 12 மெகா பிக்சல் டூயல் பின் கேமராவுடன் வருகிறது. விவோ வி11 ப்ரோ வின் முதன்மை கேமரா f/1.8 அப்பேர்ட்சர் உடன் 1.28μm பிக்சல் விகிதத்தில் வருகிறது. இந்த கேமராகள் 24 மில்லியன் போட்டோசென்சிடிவ் யூனிட்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த போட்டோசென்சிடிவ் யூனிட்கள் உங்களுக்கான அட்டகாசமான உயர் தர புகைப்படங்களை குறைந்த வெளிச்சத்திலும் எடுக்க அனுமதிக்கிறது.

25 மெகா பிக்சல் ஹை-ரெசொலூஷன் ஏ.ஐ உடன் கூடிய செல்ஃபீ கேமராவுடன் களமிறங்குகிறது. விவோ வி11 ப்ரோ வின் இந்த 25 மெகா பிக்சல் ஹை-ரெசொலூஷன் ஏ.ஐ முன் செல்ஃபீ கேமரா முக வடிவமைப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது. இந்த தொழிநுட்பத்தின் மூலம் உங்களுடைய செல்ஃபீகள் எப்பொழுதும் போல் இல்லாமல் உங்களை அழகுபடுத்தி இயல்பாககாட்டுகிறது.

டூயல் பிக்சல்

டூயல் பிக்சல்

சிறப்பான இமேஜ் குவாலிட்டி பெறுவதற்குச் சிறப்பான ஒளி நிலைகள் தேவை என்பதே அடிப்படை. அதிக வெளிச்சம் இருந்தால் நிச்சயம் நாம் எடுக்கும் படங்களின் குவாலிட்டி சிறப்பாக இருக்கும். ஸ்மார்ட்போன்களில் சிறந்த புகைப்படங்கள் எடுப்பது கடினமான விஷயமாகவே இருந்து வருகிறது. அதுவும் குறைந்த வெளிச்சத்தில் சிறப்பான படங்கள் எடுப்பதற்காக விவோ வி11 ப்ரோ புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது, அது தான் டூயல் பிக்சல் தொழில்நுட்பம்.

டூயல் பிக்சல் தொழில்நுட்பம் குறைந்த வெளிச்சத்தில் சிறந்த கேமரா பயன்பாட்டை வழங்குவதற்கு போட்டோடையோடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து பிக்சல் எண்ணிக்கையையும் அதிகரித்துச் சிறந்த குவாலிட்டி இமேஜ்களை வழங்குகிறது. டூயல் சென்சார்கள் அதிர்வுகள் எதுவும் இல்லாமல் உங்களின் புகைப்படம் மற்றும் வீடியோகளை பதிவு செய்கிறது.

அட்டகாசமான இமேஜ் குவாலிட்டி

அட்டகாசமான இமேஜ் குவாலிட்டி

டூயல் பிக்சல் தொழில்நுட்பத்தின் மூலம் கேமரா சேவை வேகமாகவும், துல்லியமாகவும் இருக்கும். மேலும் தரமான ஸ்மார்ட்போன் கேமராவுடன் ஒப்பிடும் போது சவாலான ஒளி நிலைகளில் சிறப்பாக செயல்படும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது. டூயல் பிக்சல் கேமரா மூலம் படத்தில் உள்ள ஒவ்வொரு பிக்சலும் இரண்டு சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்படுவதால்தான் இது ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிரா சென்சார்கள், அதிக ஒளி தருவதால் டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோகஸ் தொழில்நுட்பம் உணர்திறன் வேகத்தை அதிகரிக்கிறது. வரவிருக்கும் விவோ வி11 ப்ரோ கேமரா 0.03 வினாடிகளில் ஃபோகஸ் செய்து முடிக்கிறது. இன்னும் விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் எங்கள் கைகளில் கிடைக்கவில்லை என்றாலும், நிச்சயம் இதன் செயல் திறன் நம்மை ஆச்சிரியத்தில்ஆழ்த்துமென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

விவோ வி11 ப்ரோ வின் சிறப்பம்சம்

விவோ வி11 ப்ரோ வின் சிறப்பம்சம்

விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் ஏற்கனவே இடைத்தரக விலையில் வெற்றி இடத்தைப் பிடித்துள்ளது போலத் தோற்றமளிக்கிறது. இதர சிறப்பம்சமாக மேம்பட்ட பாதுகாப்பிற்காக எதிர்காலத்திற்கான ஃபேஸ் அன்லாக் மற்றும் தோடு திரை கைரேகை தொழில்நுட்பத்தைப் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

இதன் 25மெகா பிக்சல் ஏ.ஐ கேமராகள் பிரபலமான குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 சிப்செட்டால் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சிப்செட் ஒவ்வொரு நாளும் ஸ்மார்ட்போன் இன் பயன்பாட்டில் பேட்டரி, கம்ப்யூட்டிங் மற்றும் கிராஃபிக் செயல்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இயந்திர கற்றல் சக்தி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவோ வி11 ப்ரோ 2018 செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo V11 Pro with the high-end Dual-Pixel Camera will be a Delight to Shutterbugs : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X