இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் விவோ வி11 ப்ரோ அறிமுகம்: விலைதான் தருமாறு.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது, எனவே பயன்படுத்த மிக அருமையாக இருக்கும்.

விவோ நிறுவனம் நேற்று சீனாவில் விவோ வி11 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. தற்சமயம் இந்தியாவில் விவோ வி11 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம். இந்த விவோ வி11 ப்ரோ
ஸ்மார்ட்போன் முழுவதும் 3டி தொழில்நுட்ப முறையல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை வாங்கினால் ரூ.2000 வரை கேஷ்பேக் பெற முடியும். பின்பு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பாக குறிப்பிட்ட சலுகை வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12:
வரும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் இந்த விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

செல்பீ கேமரா
விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனில் 25மெகாபிக்சல் மற்றும்f/2.0 aperture ஆதரவைக் கொண்டுள்ளது, அதேபோன்று 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் மற்றும் 3டி அம்சங்கள் போன்றவை இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியைக் கொண்டுள்ளது, எனவே பயன்படுத்த மிக அருமையாக இருக்கும். குறிப்பாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்:
விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டோ-கோர் 14என்எம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் குவாட்-கோர் 2.2ஜிகாஹெர்ட்ஸ் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இவற்றில் உள்ளது.

விலை
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் மற்றும் 3400எம்ஏஎச் பேட்டரி பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.25,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications