விரைவில்: 6.41-இன்ச் டிஸ்பிளேவுடன் மிரட்டலான விவோ வி11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு விவோ வி11 சாதனம் வெளிவரும்.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் மிரட்டலான விவோ வி11 ஸ்மார்ட்போன் மாடலை வரும் செப்டம்பர் 6-ம் தேதி அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் முன்புற கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ வி11 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6.41-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

விவோ வி11 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 12எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இக்கருவி வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டு விவோ வி11 சாதனம் வெளிவரும்.

விவோ வி11 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது, ஆனால் விலைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications